ETV Bharat / state

'தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை..!' - உயர்நீதிமன்றம் - சென்னை உயர்நீதிமன்றம்

தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் உணர்ந்து, வீட்டிலும், சமூகத்திலும் பிள்ளைகளைப் பாதுகாத்து, கண்காணிப்பது பெற்றோரின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

’தங்கள் பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது பெற்ரோரின் கடமை..!’ - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Nov 3, 2022, 3:59 PM IST

சென்னை: நீலகிரி மாவட்டம், கூடலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த யுவராஜ் எனும் மாணவர் கடந்த 2017ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தற்கொலை செய்துகொண்டார். மாணவர்களின் தலைமுடியை வெட்டியும், கால் சட்டையைக்கிழித்தும் தலைமை ஆசிரியர் துன்புறுத்தியதால் தன் மகன் தற்கொலை செய்து கொண்டதாகக்கூறி, தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கவும், 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக்கோரி மாணவனின் தாய் கலா கடந்த 2018ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மாணவர்களுடைய ஒழுக்கத்தை கடைபிடிக்கும் வகையில், தலைமை ஆசிரியர் நடந்துகொண்டதாகவும் குறிப்பிட்ட தலைமை ஆசிரியர் பணியில் இருந்த காலத்தில் பள்ளியின் தேர்ச்சி விழுக்காடு 45 விழுக்காட்டில் இருந்து 90 விழுக்காடாக உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தப்புகார் குறித்து மாவட்ட தலைமை கல்வி அலுவலர் நடத்திய விசாரணையில், குற்றச்சாட்டுகள் தவறு என அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தலைமை ஆசிரியர் ராபர்ட் தரப்பில், தற்கொலை செய்து கொண்ட யுவராஜ் ஒவ்வொரு மாதமும் 50 விழுக்காடு நாட்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வருவார் என்றும், தனக்கு எதிரான பொய்யான புகார் என்றும், பணம் பறிக்கும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவன் யுவராஜ் தற்கொலை தொடர்பாக மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் காவல்துறை நடத்திய விசாரணையின் அடிப்படையில் பெற்றோரின் குற்றச்சாட்டு உண்மை இல்லை என்று நிரூபணம் ஆவதாகக்கூறி தாய் கலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், போதிய ஆதாரங்கள் இல்லாமல் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியரை குறை கூறுவதை ஏற்க முடியாது என்றும், மாணவர்களை ஒழுங்குபடுத்த கல்வித்துறை வகுத்துள்ள விதிகளை மீறும் பொழுதுதான் அவர்களை தண்டிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டால் எவ்வித ஆதாரங்களும் இல்லாத நிலையில் ஆசிரியர்களுக்கு எதிராக குற்றம் சாட்டக்கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார். இதுபோன்ற பொதுவான குற்றச்சாட்டால் பள்ளியின் பெயரும், பிற மாணவர்களின் நலனும் பாதிக்கப்படுவதாகவும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாணவர்களை நன்றாக படிக்கச்செய்யவும், ஒழுங்கம் பேணச் செய்யவும் முயற்சிக்கும் ஆசிரியர்களை ஊக்கக் குறைவுபடுத்தினால், அவர்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் தங்களது கடமையை செய்ய மாட்டார்கள் என்றும் உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். மாணவர்களின் ஒவ்வொரு செயல்பாட்டிற்கும் ஆசிரியர்களை குறைகூற முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பள்ளி அல்லது ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டுவதற்கு முன்பாக தங்களது பிள்ளைகள் மீதான கடமையையும், பொறுப்பையும் பெற்றோர்கள் உணர்ந்திருக்க வேண்டும் என்றும், வீட்டிலும், சமூகத்திலும் தங்களது பிள்ளைகளை பாதுகாத்து, கண்காணிப்பது அவர்களின் கடமை என்றும் நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: அபராதத்தை 14 நாட்களுக்குள் செலுத்தாவிட்டால் வாகனம் பறிமுதல் என அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.