ETV Bharat / state

சரியான நிபந்தனையின்றி பெற்றோர்கள் செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் - Parents cannot cancel settlement deed without proper condition

பெற்றோர்களை முறையாக பராமரிக்க வேண்டும் என்று வாரிசுதாரர்களுக்கு நிபந்தனை விதிக்காவிட்டால் செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சரியான நிபந்தனையின்றி பெற்றோர்கள் செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய முடியாது

author img

By

Published : Jul 6, 2022, 9:21 AM IST

சென்னை: அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சின்னம்மாள். இவர் தனக்கு சொந்தமான சொத்தை மகன் மரிய பிரகாசத்திற்கு கடந்த 2016 ஆம் ஆண்டு செட்டில்மெண்ட் பத்திரம் மூலம் எழுதி கொடுத்தார். பின்னர், வேறு வாரிசுக்கு கொடுக்க வேண்டும் என முடிவெடுத்த சின்னம்மாள், தனது செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்யக்கோரி வருவாய் கோட்டாட்சியரிடம் விண்ணப்பித்தார்.

அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், மாவட்ட ஆட்சியரிடம் மேல்முறையீடு செய்தார். அந்த மனுவை பரிசீலித்த மாவட்ட ஆட்சியர், சின்னம்மாள் எழுதி கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்து கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உத்தரவு பிறப்பித்தார்.

ஆனால், மாவட்ட ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்து, தாயார் எழுதி கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை உறுதி செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மரிய பிரகாசம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எம்.லோகநாதன் ஆஜராகி, தங்கள் வாரிசுகளுக்கு சொத்தை எழுதிக் கொடுக்கும்போது, பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலச் சட்டத்தின் கீழ் முறையாக தங்களை பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்திருந்தால் மட்டுமே, அதை ரத்து செய்ய முடியும், எனவே செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்ய மறுத்த ஆர்.டி.ஓ. உத்தரவு சரியானது என வாதிட்டார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்துள்ள உத்தரவில், தங்களை பராமரிக்க வேண்டும் என்று நிபந்தனை எதுவும் சின்னம்மாள் எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தில் விதிக்காத நிலையில், செட்டில்மெண்ட்டை ரத்து செய்த மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை தவறு என கூறி, அதை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

மேலும் தாயின் பராமரிப்பு செலவாக மாதம் 2ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருப்பது போதுமானதாக இருக்காது என தெரிவித்துள்ள நீதிபதி அப்துல் குத்தூஸ், அந்த தொகையை 5ஆயிரம் ரூபாயாக வழங்க வேண்டும் என மனுதாரர் மரிய பிரகாசத்திற்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்துவைத்தார்.

மகனுக்கு எழுதிக் கொடுத்த செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வது தொடர்பாக உரிமையியல் நீதிமன்றத்தை நாடும்படி சின்னம்மாளுக்கு உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டை ஒரு ஸ்மார்ட் மாநிலமாக உருவாக்குவதுதான் இலக்கு- முதலமைச்சர் ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.