சென்னை: தலைமைச் செயலகத்தில் இன்று(டிச.20) 3 மணிக்கு பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் 13 கிராம மக்களின் போராட்டக் குழுவினரிடம், நிலம் கையகப்படுத்துதல், இழப்பீடு வழங்குதல், உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அமைச்சர்கள் எ.வ. வேலு, தா.மோ.அன்பரசன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
முன்னதாக, கிராம மக்கள் வேறு ஒரு இடத்தில் நிலமோ, இழப்பீடு தொகையோ தேவை இல்லை என்றும்; பூர்வகுடி கிராம மக்களை அரசாங்கம் வேறு இடம் கொடுத்து அனுப்பக்கூடாது எனவும்; பரந்தூர் விமான நிலையம் அமைக்கத் தேர்வு செய்யபட்ட இடத்தில் மாண்டஸ் புயல் மழையின்போது மழைநீர் வெள்ளமாக ஓடியதைக் கூட அரசு கணக்கில் கொள்ளவில்லையென கிராம மக்கள் கூறி, போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய சூழலில் அமைச்சர்களுடனான இந்தப் பேச்சுவார்த்தையில் கிராம மக்கள் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:பரந்தூர் விமான நிலையம் 2024ஆம் ஆண்டுக்குள் தயாராகும் - ஜோதிராதித்ய சிந்தியா