சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் இன்று செய்தியாளர்களைச் சந்திப்புப் பேசினார்.
அப்போது, வங்கக்கடலில் 1500 கி.மீ., தொலைவில் நிலைகொண்டுள்ள ஃபானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, ஏப்ரல் 30ஆம் தேதி, வடதமிழ்நாடு கடற்கரைக்கு அருகில் வரக்கூடும் எனத் தெரிவித்தார்.
மேலும், இன்று மற்றும் நாளை (26-27) ஆகிய தேதிகளில் தென்கிழக்கு கடல்பகுதிகளுக்கும், 28-30 ஆகிய தேசிகளில் வங்கக் கடல்பகுதிக்கு மீனவர்கள் செல்லவேண்டாம் எனவும் அறிவுறுத்திய அவர், "புயலின் காரணமாக ஏப்ரல் 30ஆம் தேதி, வடதமிழ்நாட்டில் கடலோரப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது" என்றும் தெரிவித்தார்.
அதேபோல், தமிழ்நாட்டில் இதுவரை சோலையாறில் 2 செ.மீ., கொடைக்கானலில் 1 செ.மீ., கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சானியில் 1 செ.மீ., மழைப் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.