ETV Bharat / state

உலக புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தோடு, கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம் - கீழடி அகழாய்வு

சென்னை: உலக புகழ் பெற்ற பல்கலைக்கழகத்தோடு கீழடியில் அடுத்தக்கட்ட ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

pandiarajan
author img

By

Published : Sep 20, 2019, 4:07 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 18ஆவது தமிழ் இணைய மாநாட்டில் கலந்துகொண்டு தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் சிறப்புரை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக கீழடி மாறியுள்ளது. தமிழ்நாடு அரசால் 40 அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. கீழடியில் நடத்தப்பட்டுவரும் 5ஆம் கட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது.

அதில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன. இது தொடர்பாக, இந்த பகுதியில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் சங்குகளை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல வணிக ரீதியான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்றுவரை இந்தியாவின் பல பகுதிகளில் கழிவுநீர் வடிகால்கள் சரிவர அமைக்கப்படவில்லை.

பாண்டியராஜன் செய்தியாளர் சந்திப்பு

ஆனால் அந்த காலத்திலேயே கழிவிடங்கள், கழிவு நீர் செல்லக்கூடிய பாதைகள் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளன. கீழடியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பொக்கிஷங்கள் கிடைத்துவருகின்றன . அதேபோல, தங்க நகை ஆபரணங்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்துள்ளன. இது சிந்து சமவெளியில் கிடைத்த அதே தமிழ் பிராமி எழுத்துக்கள் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், கீழடி அகழ்வாராய்ச்சியை மிக பெரிய முயற்சியாக தமிழ்நாடு அரசு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது . உலக தமிழகர்களை உணர்வுப்பூர்வமாக ஒருங்கிணைக்கக்கூடிய ஓர் இடமாக கீழடி திகழ்கிறது.

6ஆம் கட்ட கீழடி அகழாய்வினை உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்படுத்த விரும்புகிறோம். இதுதொடர்பாக, மத்திய கலாசார அமைச்சரை சந்திக்க உள்ளேன். இந்த அகழாய்வினை ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளோம். தற்போது, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அகழ் வைப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் 5 பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டுவருகின்றன. அதனை முறையாக வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: கீழடியில் விரைவில் ஆறாம் கட்ட அகழ்வாராய்ச்சி - அமைச்சர் கே.பாண்டியராஜன்

Intro: உலக புகழ் பெற்ற பல்கலையோடு
கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம் Body: உலக புகழ் பெற்ற பல்கலையோடு
கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டம்

அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

சென்னை,
உலக புகழ் பெற்ற பல்கலையோடு கீழடியில் அடுத்தகட்ட ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை அண்ணாப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற 18 வது தமிழ் இணைய மாநாட்டில் கலந்துக் கொண்டு சிறப்புரை வழங்கினார். அப்போது பேசிய அவர், தற்பொழுதைய இணைய உலகில் 80 சதவீத தகவல் தொடர்புகள் செல்போன் மற்றும் இணையம் மூலம் நடைபெறுகின்றன. அவற்றில் 50 சதவீதம் தகவல் தொடர்பு ஆங்கிலத்தில் நடைபெறுகிறது. தமிழ் மொழியில் மிகவும் குறைந்த அளவில் தான் நடைபெறுகிறது.
உலகில் உள்ள 7 செம்மொழிகளில் தமிழ், சீன மாெழியைத் தவிர மற்ற 5 மொழிகள் பேசப்படுவது கிடையாது. எனவே இணையதளத் தொடர்பில் தமிழ் மொழியை அதிகளவில் பயன்படுத்த வேண்டும். தமிழக அரசின் சொற்குவைத் திட்டத்தில் மாணவர்கள் அதிகளவில் புதிய சொற்களை உருவாக்க வேண்டும் என பேசினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பாண்டியராஜன், தமிழ் மொழியில் இளைஞர்கள் சொற்களைப் படைக்கும் வீரர்களாக மாற வேண்டும். சொற்குவை இணையத்தளத்தை பயன்படுத்தி புதிய தமிழ் சொற்களை உருவாக்க வேண்டும். இணையதளத்தில் 120 மொழிகள் தான் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் மீண்டும் ஒரு மொழிப்போர் நடத்தி புதிய வார்த்தைகளை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது எந்த மொழிக்கும் எதிர்ப்பு அல்ல என கூறினார்.

தமிழ் வழியில் படித்த மாணவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் உள்ளன. தற்பொழுது நீதிமன்றத் தீர்ப்புகள் தமிழிலும் மொழி பெயர்த்து அளிக்க வேண்டும் என கூறியுள்ளதால், 350 மொழிப்பெயர்ப்பாளர்கள் தேவைப்படுகின்றனர்.மேலும் தமிழ் வழியில் படிப்பவர்களுக்கான வேலை வாய்ப்புகளை அரசு உருவாக்கி வருகிறது.

உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் ஒரு இடமாக கீழடி மாறியுள்ளது. தமிழக அரசால் 40 அகழ்வாராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளது. கீழடியில் நடத்தப்பட்டு வரும் 5ம் கட்ட அகழாய்வு தொடர்பாக அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது. அதில் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்த்த தமிழர்கள் பயன்படுத்திய பொருட்கள் உள்ளிட்டவை கிடைத்துள்ளது. இது தொடர்பாக, இந்த பகுதியில் நெசவு தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட கருவிகள் அனைத்தும் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் சங்குகளை பயன்படுத்தி ஆபரணங்கள் செய்யப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது போன்று பல வணிக ரீதியான பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இன்று வரை இந்தியாவின் பலபகுதிகளில் கழிவுநீர் வடிகால்கள் சரிவர அமைக்கப்படவில்லை.

ஆனால் அந்த காலத்திலேயே, கழிவிடங்கள், கழிவு நீர் செல்லக்கூடிய பாதைகள் இவை அனைத்தும் உருவாக்கப்பட்டுள்ளது. கீழடியில் ஒவ்வொரு நாளும் புதுப்புது பொக்கிஷங்கள் கிடைத்து வருகிறது . அதேபோல, தங்க நகை ஆபரணங்களும் கிடைத்துள்ளன. தமிழ் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கீழடியில் கிடைத்துள்ளன. இது சிந்து சமவெளியில் கிடைத்த அதே தமிழ் பிராமி எழுத்துக்கள் என கண்டறியப்பட்டுள்ளது. மேலும், கீழடி அகழ்வாராய்ச்சியை மிக பெரிய முயற்சியாக தமிழக அரசு முன்னெடுத்து சென்று கொண்டிருக்கிறது . உலக தமிழகர்களை உணர்வுபூர்வமாக ஒருங்கிணைக்கக்கூடிய ஓர் இடமாக கீழடி திகழ்கிறது.

மேலும் 6ம் கட்ட கீழடி அகழாய்வினை உலக புகழ்பெற்ற பல்கலைக்கழகத்தோடு இணைந்து செயல்படுத்த விரும்புகிறோம். இது தொடர்பாக, மத்திய கலாசார அமைச்சரை சந்திக்க உள்ளேன். இந்த அகழாய்வினை ரூ.20 கோடி ஒதுக்கீட்டில் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைக்கவுள்ளோம். தற்போது, கீழடியில் கண்டுபிடிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்த அகழ்வைப்பகம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கீழடியில் 5 பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றன. அதனை முறையாக வெளியிட ஏற்பாடு செய்து வருகிறோம்.இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானின் கோரிக்கையை ஏற்று தமிழகத்தில் இசைக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என கூறினார். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.