ETV Bharat / state

குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி மோசடி : திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

author img

By

Published : Nov 23, 2020, 3:43 PM IST

திருப்பூர் மாவட்டத்தில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி பண மோசடி செய்த முன்னாள் பஞ்சாயத்துத் தலைவருக்கு எதிரான வழக்கில், மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Panchayath president malpractice in public fund, notice to Tiruppur collector, MHC order

சென்னை : கடந்த 2015ஆம் ஆண்டு திருப்பூர் மாவட்டம், சர்கார் காத்தகண்ணி கிராமத்தில் குடிநீர் இணைப்பு தருவதாகக் கூறி அப்போதைய பஞ்சாயத்துத் தலைவர் சந்திரன், பஞ்சாயத்து ஊழியர் சோமசுந்தரம் ஆகியோர் கிராமத்தில் உள்ள சுமார் 400 வீடுகளில் தலா ஐந்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரை வசூல் செய்துள்ளனர்.

ஆனால் இதுவரை குடிநீர் இணைப்பு வழங்கப்படாததையடுத்து, அதே கிராமத்தை சேர்ந்த பெரியசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று (நவ.23) நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, கிராம மக்களிடம் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவர் சந்திரன், ஊழியர் சோமசுந்தரம் ஆகியோர் தாங்கள் வசூலித்த பணத்திற்கு ரசீது கூட வழங்காமல் ஏமாற்றியதாக மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.கணகராஜ் புகார் தெரிவித்தார். மேலும், குடிநீர் இணைப்புக்காக ஏற்கனவே பணம் செலுத்திவிட்ட நிலையில், தற்போது மீண்டும் பணம் செலுத்தினால் தான் குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என தற்போதைய பஞ்சாயத்துத் தலைவர் தெரிவிப்பதாகவும், கிராம மக்களிடம் பண மோசடி செய்த முன்னாள் பஞ்சாயத்து தலைவர் மற்றும் ஊழியர் மீது திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த புகார் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக டிசம்பர் 27ஆம் தேதிக்குள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: 76 ஆண்டுகளுக்கு பிறகு, சென்னை குடிநீர் தேவைக்காக புதிய நீர்த்தேக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.