ETV Bharat / entertainment

”எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கியுள்ளேன்”... இயக்குநர் பாலா குறித்து அருண் விஜய் நெகிழ்ச்சி! - ARUN VIJAY ABOUT DIRECTOR BALA

Arun vijay about director bala: நடிகர் அருண் விஜய் தான் 'வணங்கான்' படத்தில் நடித்த அனுபவம் குறித்தும், இயக்குநர் பாலாவை பாராட்டியும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் பாலாவை பாராட்டிய அருண் விஜய்
இயக்குநர் பாலாவை பாராட்டிய அருண் விஜய் (Credits - @arunvijayno1 X Account)
author img

By ETV Bharat Entertainment Team

Published : Nov 18, 2024, 1:10 PM IST

சென்னை: நடிகர் அருண் விஜய், பாலா இயக்கத்தில் ’வணங்கான்’ படத்தில் நடித்த அனுபவம் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். வி ஹவுஸ் புரோடக்சன்ஸ் நிறுவனம் மற்றும் பி ஸ்டூடியோஸ் நிறுவனம் இணைத்து தயாரித்து பாலா இயக்கத்தில் அருண் விஜய், ரோகினி பிரகாஷ், சமுத்திரகனி, மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ள திரைப்படம் ’வணங்கான்’.

ஜீ.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வைரமுத்து பாடல்களை எழுதி உள்ளார். வணங்கான் படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் மற்றும் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ (U/A) தணிக்கை சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த படத்தின் டிரெய்லரில் அருண் விஜய் கவனம் பெற்றார். இந்நிலையில் அருண் விஜய் தனது சமூக வலைதள பக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவில், “நான் திரையுலகில் கால் பதித்த காலத்தில் இருந்து, உங்கள் படைப்புகளின் ரசிகனாகவும், உங்களைக் கண்டு வியந்து, நேசித்து, ஒரு நடிகனாக "எனக்கும் இப்படி ஒரு வாய்ப்பு கிடைக்காதா" என ஏங்கியவனுக்கு தங்களின் இயக்கத்தில் பணியாற்ற 'வணங்கான்' படத்தின் மூலம் வாய்ப்பளித்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்.

நம் படப்பிடிப்பின் பொழுது கூட இக்கதையின் பாதிப்பை நான் முழுமையாக உணரவில்லை. ஆனால் அதனை இப்பொழுது வெள்ளித்திரையில் காண்கையில், என் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. என் பெற்றோரை பெருமையில் நெகிழ்வடைய செய்தமைக்கு உங்களை வணங்குகிறேன்.

எனது திரையுலக பயணத்தில், வணங்கான் ஒரு மிக முக்கியமான பாகமாக அமையும் என்பதில் எனக்கு துளி அளவும் சந்தேகமில்லை. இப்படைப்பின் மீது முழுமையான நம்பிக்கை வைத்து, பக்க பலமாக இருந்து கொண்டிருக்கும் சுரேஷ் காமாட்சி அவர்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். மக்கள் அனைவரும் இப்படத்தை விரைவில் திரையில் காணும் நாளை மிகவும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: புஷ்பான்னா ஃபயர் இல்ல 'வைல்டு ஃபயர்'... 40 மில்லியனை கடந்து ’புஷ்பா 2’ டிரெய்லர் சாதனை!

‘வணங்கான்’ திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த ஆண்டு தொடக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் பாலா கடைசியாக இயக்கிய ’வர்மா’ திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களை பெற்ற நிலையில், வணங்கான் படத்திற்கு ரசிகர்கள் பெரும் எதிர்ப்பார்ப்பில் உள்ளனர்.

ஈடிவி பாரத் வாட்ஸ்அப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.