ETV Bharat / state

ஆபாச நடனம் நடத்திய தனியார் விடுதிக்கு சீல்

கலாச்சார நடனம் என்ற பெயரில் சட்டவிரோதமாக ஆபாச நடனம் நடத்தி வந்த தனியார் விடுதிக்கு சென்னை மாநகராட்சி அலுவலர்கள் சீல் வைத்தனர்.

ரெஸ்டாரன்ட்
ரெஸ்டாரன்ட்
author img

By

Published : Dec 17, 2021, 9:27 AM IST

சென்னை: அண்ணா சாலையில் ராமசாமி என்பவருக்குச் சொந்தமான பால்ஸ் ரெஸ்டாரன்ட் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வந்தது. இந்த ரெஸ்டாரன்ட்டில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கலாச்சார நடனங்கள் இரவு 7 மணி முதல் 11.45 மணிவரை மூன்று காட்சிகளாக நடத்தப்பட்டு வந்தது.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஜெயப்பிரகாஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பால்ஸ் ரெஸ்டாரன்டில் கலாச்சார நடனம் நடத்துவதாகக் கூறி நள்ளிரவில் ஆபாச நடனம் நடத்தப்படுவதாகவும், தனியார் ரெஸ்டாரன்ட்டின் உரிமத்தை ரத்து செய்து நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2019 ஆம் ஆண்டு பால்ஸ் ரெஸ்டாரன்ட் உரிமத்தை ரத்து செய்ய சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் தனியார் ரெஸ்டாரன்ட் உரிமத்தை மாநகராட்சி ரத்து செய்தபோதிலும் கடந்த மூன்று ஆண்டுகளாக உரிமமின்றி கலாச்சார நடனத்தையும், சட்டவிரோதமாக நள்ளிரவு நேரங்களில் அங்கு ஆபாச நடனமும் வாடிக்கையாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் துறையினர் இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தனர்.

இவ்வழக்கு தொடர்பாகத் தனியார் ரெஸ்டாரன்ட் உரிமையாளர் ராமசாமி தரப்பில் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கு நேற்று முன்தினம் (டிசம்பர் 15) உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் அடுத்த 24 மணி நேரத்துக்குள் குறிப்பிட்ட பால்ஸ் ரெஸ்டாரன்ட் செயல்பாட்டை நிரந்தரமாகத் தடை செய்து ரெஸ்டாரன்டிற்கு சீல் வைக்க சென்னை மாநகராட்சிக்கு உத்தரவிட்டது.

மேலும் தமிழ்நாடு முழுவதும் இதுபோன்ற சட்டவிரோத நடனங்கள் நடைபெறும் ரெஸ்டாரன்ட் அனைத்தையும் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு காவல்துறைக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் நேற்று (டிசம்பர் 16) காலை சென்னை மாநகராட்சி அலுவலர்கள் அண்ணா சாலையில் இயங்கி வந்த பால்ஸ் ரெஸ்டாரன்டிற்கு சீல் வைத்தனர்.

இதையும் படிங்க: தொழிலாளர்களுக்கான உணவகம், இரவு தங்கும் விடுதி - அரசு அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.