சென்னை பள்ளிக்கரணை அருகே தனது இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது அதிமுக பிரமுகர் வைத்த பேனர் விழுந்தது. இதனால் நேர்ந்த விபத்தில் அப்பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், இது தொடர்பான வழக்குகளை உயர் நீதிமன்றம் நேரடியாக கண்காணிக்கும் என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் நேற்று அறிவித்தனர்.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட பேனரை வைத்த அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் கைது செய்யப்படலாம் என்று காவல் துறை வட்டாரத்தில் தகவல் வெளியானது.
இந்த நிலையில், பள்ளிக்கரணை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சு வலி காரணமாக ஜெயகோபால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.