ETV Bharat / state

'அத்திக்கடவு - அவிநாசி திட்டம் செயல் வடிவம் பெற்றுள்ளது' - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி - Athikadavu - Avinashi Project

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான 'அத்திக்கடவு - அவிநாசி' திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

athikadavu
author img

By

Published : Nov 15, 2019, 5:10 PM IST

தமிழ்நாடு பொதுப்பணித்துறை சார்பில் ஆய்வுக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில், முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. கட்டடங்கள் மற்றும் நீர்வளத்துறையின் நிலை குறித்தான இந்த ஆய்வுக்கூட்டத்தில், நீர்வள ஆதாரம் தொடர்பான நூலை முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார்.

புத்தகத்தை வெளியிட்டுப் பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 'நீர் மேலாண்மையை தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அதன்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம். குடிமராமத்துத் திட்டம் மக்களிடமும், விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பருவ மழையை சேமிக்கும் குடிமராமத்துத் திட்டம் மக்கள் இயக்கமாகவும் உருவெடுத்துள்ளது' எனக் கூறினார்.

மேலும், மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவுத் திட்டமான 'அத்திக்கடவு - அவிநாசி' திட்டம், தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆயிரம் கோடி மதிப்பீட்டில் தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர் பழனிசாமி, அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவே இந்தக் கூட்டம் நடைபெறுவதாகவும் விவரித்தார்.

இதையும் படிங்க: வெளிநாடுகளுக்கு இணையாக மாறிய சென்னை பாண்டி பஜார்

Intro:Body:Visual sent by mail

*குடிமராமத்து திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாகவும்*
*அத்திக்கடவு -அவினாசி திட்டம் செயல்வடிவம் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்..*

தமிழகப் பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வளத்துறை நிலை குறித்து ஆய்வு கூட்டம்
முதலமைச்சர் தலைமையில்
தலைமைச்செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞ்ர் மாளிகையில் நடைபெற்றது.
பொதுப்பணித் துறை சார்பாக கட்டிடங்கள் மற்றும் நீர்வள துறை நிலை குறித்து முதலமைச்சர் ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர்தொடக்க உரை நிகழ்த்தினார் .

பொதுப்பணித்துறை நீர்வள ஆதாரம் தொடர்பான புத்தகத்தையும் முதலமைச்சர் வெளியிட்டார்.

புத்தகத்தை வெளியிட்டு பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
பொதுப்பணித்துறை சார்பாக நடைபெற்றுவரும் திட்டங்களின் நிலை குறித்து இந்த ஆய்வு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார்.

நீர் மேலாண்மையை தமிழக அரசு சிறப்பாக செயல்படுத்துவதாக தெரிவித்த முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் அதன் விவரங்கள் அதன்மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உள்ளோம் என்று கூறினார் மேலும்
சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அதில் முக்கியமாக குடிமராமத்து திட்டம் மக்களிடமும் விவசாயிகளிடமும் பெரும் வரவேற்பு பெற்றுள்ளதாக தெரிவித்தார்.

பருவமழையை சேமிக்கும் குடிமராமத்து திட்டம் மக்கள் இயக்கமாக உருவெடுத்துள்ளதாக குறிப்பிட்ட முதலமைச்சர்

அத்திக்கடவு அவினாசி திட்டம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் கனவு திட்டம் என்றும் திட்டம் என்றும் தற்போது செயல்படும் பெற்றுள்ளதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

ஆயிரம் கோடியில் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு தடுப்பணைகள் கட்டும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்ட முதலமைச்சர் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை குறித்து ஆய்வு செய்யவே இந்த கூட்டம் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.