ETV Bharat / state

'டே.. கூத்தாடி பயலே.. கமலை காமராஜர் இப்படித்தான் அழைப்பார்' - பழ. கருப்பையா பகிர்வு

கமலை 'டே.. கூத்தாடி பயலே..' என்று செல்லமாக காமராஜர் அழைப்பார் என பழ.கருப்பையா பேசியுள்ளார்.

'டே.. கூத்தாடி பயலே.. கமலை காமராஜர் இப்படித்தான் அழைப்பார்' - பழ. கருப்பையா பகிர்வு
'டே.. கூத்தாடி பயலே.. கமலை காமராஜர் இப்படித்தான் அழைப்பார்' - பழ. கருப்பையா பகிர்வு
author img

By

Published : Jul 15, 2021, 10:58 PM IST

சென்னை: மநீம கட்சியின் தொழிற்சங்கப் பேரவைத் தொடக்க விழா ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று (ஜூலை 15) நடைபெற்றது.

இதில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன், அரசியல் ஆலோசகர் பழ. கருப்பையா உள்ளிட்டப் பலரும் கலந்து கொண்டனர்.

கமலுக்கும் காமராஜருக்குமான தொடர்பு

அப்போது மேடையில் பேசிய பழ. கருப்பையா, "கமல் சிறு வயதிலேயே நடிகரான நிலையில் காமராஜர் அவரை கூப்பிட்டு, டே.. கூத்தாடி பயலே.. படிப்பதை விட்டுவிட்டு கூத்தாடிக் கொண்டிக்கிறாயே என்று கேட்டாராம். ஆனால், அவர் அந்த துறையிலும் வளர்ச்சியைடந்தார். அறிவு நிலையிலும் வளர்ச்சியடைந்தார்.

அவருடைய புத்தக வரிசைகளைப் பார்த்தால், வியுப்புறும் வண்ணம் அவ்வளவு படித்திருக்கிறார். பல சமயங்களில் அவர் பேசுவது புரியவில்லை என்று சொல்வதற்குக் காரணம் அவர் கொஞ்சம் கூடுதலாகப் பேசுவார். கவிதையாகவே சிந்தித்து பழகியவர். அதனால் எல்லாவற்றையும் கவிதையாக சொல்ல முயல்வார். கவிதை என்பது செறிவு.

பழ. கருப்பையா பேச்சு

அதை ஆழமாகப் புரிந்துகொள்வது என்பது எளிதானதல்ல. ஆகையால், காமராஜர் அவரை, டே... கூத்தாடி பயலே என செல்லமாக சொல்கின்ற அளவுக்கு தலைவர் காமராஜரோடு அவருக்குத் தொடர்பு இருந்தது. வரலாற்றில் படிப்பே இல்லாமல் பெரிய இலக்கைப் பிடித்த ஆட்சியாளர்கள் அக்பர், காமராஜர் ஆகியோர்தான்.

கமல் தோற்றால் என்ன?

மக்கள் நீதி மய்யத்தின் மய்யம் காந்தி தான். தோற்பதை பற்றியும் தோற்றுவிட்டதைப் பற்றியும் அதனால் சிலர் கட்சியிலிருந்து போவதை மட்டும் பேசுகிறார்கள்.

தோல்வியும் வெற்றியும் மாறி மாறி வரக்கூடியதுதான். காமராஜரை அவருடைய சொந்த மக்கள் விருதுநகரிலேயே தோற்கடித்து விட்டனர்.

அதனால் காமராஜர் கவலைப்படவில்லை. அதுபோலவே அண்ணா தோற்கவில்லையா? ஆக கமல் தோற்றால் என்ன? கமல் கட்சி தோற்றால் என்ன?. தோற்கிறோம், வெற்றி பெறுகிறோம் என்பது முக்கியமில்லை. நம்மை தாண்டியவர்களால் அரசியல் நடத்த முடியாத அளவிற்கு நாம் நெருக்கடியை ஏற்படுத்துகிறோம்.

நீட் தேர்வை ஒழிக்க முடியாது என தெரிந்ததும் அதை ஒழிக்க முடியும் என தேர்தல் வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்த உடன் முதல் கையெழுத்து என்று கூறி, கடைசி கையெழுத்துக் கூட இன்னும் போடாமல் இருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்" என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'நான் பேசும் தமிழ் புரிந்தால் தமிழ் வாழும்' - கமல் ஹாசன்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.