ETV Bharat / state

சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட ஓவியம்: அமெரிக்க அருங்காட்சியகத்தில் கண்டுபிடிப்பு - சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் கண்டுபிடிப்பு

தஞ்சாவூர் சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட சரபோஜி - சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் பழங்கால ஓவியம் அமெரிக்காவில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.

சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட ஓவியம் அமெரிக்க அருங்காட்சியகத்தில்

author img

By

Published : Jul 21, 2022, 6:32 PM IST

சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சரஸ்வதி மஹாலில் கடந்த 1822-1827 காலகட்டத்தில் வரையப்பட்டு வைக்கப்பட்டிருந்த சரபோஜி - சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் ஓவியம் திருடுபோயுள்ளதாகவும், அதை கண்டுபிடிக்குமாறும் கடந்த 2017 ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவில் புகார் அளித்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் முன்னேற்றம் ஏற்படாத நிலையில், சிறப்பு ஆய்வுக்கூட்டம் நடத்தி சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு இயக்குநர் ஜெயந்த் முரளி உத்தரவின் பேரில் ஓவியம் தொடர்பான தகவல்கள் குறித்து பிற நாட்டில் உள்ள பழங்காலப் பொருட்கள் சேகரிப்பாளர்களிடமும், அருங்காட்சியகங்களிலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் கேட்டு வந்தனர்.

சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்
சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர்

இந்த முயற்சியில் தொன்மையான சரபோஜி - சிவாஜி மன்னர்கள் இணைந்திருக்கும் அந்த ஓவியமானது அமெரிக்காவில் உள்ள PEM என்ற அருங்காட்சியகத்தால் வாங்கப்பட்டதும், பின் முறையான ஆவணங்கள் இல்லாததால் அமெரிக்காவின் ஹோம்லாண்ட் செக்யூரிட்டி மூலம் கடந்த 2015 ஆம் ஆண்டு பறிமுதல் செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளதும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாருக்கு தெரியவந்துள்ளது.

குறிப்பாக கடந்த 2006 ஆம் ஆண்டு பிரபல சிலைகடத்தல் மன்னன் சுபாஷ் கபூர் போலியான ஆவணங்கள் கொடுத்து அமெரிக்காவில் உள்ள PEM அருங்காட்சியகத்தில் அந்த ஓவியத்தை 35 ஆயிரம் டாலருக்கு விற்றதும் தெரியவந்துள்ளது. ஏற்கனவே தொன்மையான அந்த ஓவியம் அமெரிக்காவின் ஹோம்லாண்ட் செக்யூரிட்டியால் பறிமுதல் செய்யப்பட்டும், 2015 ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் இருந்து அந்த ஓவியத்தை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது.

சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட ஓவியம் அமெரிக்க அருங்காட்சியகத்தில்
சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட ஓவியம் அமெரிக்க அருங்காட்சியகத்தில்

மேலும், 2017 ஆம் ஆண்டு ராஜேந்திரன் என்பவர் அளித்த புகாரைத் தொடர்ந்தே தற்போது இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இந்நிலையில் அந்த ஓவியத்தை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே கடந்த ஜூலை 1 ஆம் தேதி சரஸ்வதி மஹாலில் இருந்து திருடப்பட்ட, முதல் முதலாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட "புதிய ஏற்பாடு" பைபிள் லண்டனில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்து அதை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் முதல் யூத கல்வெட்டு; ராமநாதபுரத்தில் கண்டெடுப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.