சென்னை: ஆசியாவின் முன்னணி பெயின்ட் உற்பத்தியாளர்களில் ஒன்றான நிப்பான் பெயின்ட் நிறுவனம், அதன் பெருநிறுவன சமூகப் பொறுப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த பின்தங்கிய, ஊரகப் பகுதியைச் சேர்ந்த ஆயிரம் பெண்களுக்கு மெட்ராஸ் கிழக்கு ரோட்டரி குழுவுடன் இணைந்து சென்னையில் பெயின்டிங் பயிற்சி அளிக்கவுள்ளது.
நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் என்சக்தி பயிற்சித் திட்டத்தின்கீழ் இந்த முன்னெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது. ஊரகப் பகுதிகளில் உள்ள பெண்கள் வேலைவாய்ப்பு பெறவும், அவர்கள் சுயசார்புடன் வாழவும் இது செயல்படுத்தப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்பெண்களுக்கு நிப்பான் பெயின்ட் நிறுவனத்தின் பயிற்சி மையத்திலிருந்து தேர்ச்சிப் பெற்ற பயிற்சியாளர்கள் பயிற்சியளிக்கவுள்ளனர்.
பெண்களுக்கு வேலை வாய்ப்பு
இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ”12 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் பங்குபெறும் பெண்களுக்கு ஒருங்கிணைந்த அளவில் தொழில்முறையான பெயின்டராவதற்குத் தேவையான அனைத்தும் கற்றுத் தரப்படும். இதன்வாயிலாக அவர்கள் பெயின்டிங் சந்தையில் உள்ள தேவைகளுக்கு ஏற்ப பயிற்றுவிக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தின் மூலம் பயிற்சி பெற்றவர்களுக்கு நிப்பான் பெயின்ட் டீலர்கள், வீட்டு உள்புறத் தோற்ற அலங்கரிப்பு வல்லுநர்கள், கட்டடக் கலை வல்லுநர்கள் ஆகியோரிடம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். அவர்கள் நிப்பான் பெயின்ட் நிறுவன உதவியுடன் பல்வேறு வேலைகளில் பணியாற்றுவார்கள்” எனத் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கூல் டிரிங்க்ஸ் குடித்த சிறுமி மரணம் - போலீஸ் விசாரணை!