கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பகுதிநேரம் ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜே அப்துல் கலாமின் பிறந்தநாளை முன்னிட்டும், கலாம் அவர்களின் கனவுத் திட்டமான நதிநீர் இணைப்பு திட்டத்தை நினைவு கூறும் வகையிலும் படம் வரைகின்ற கை மேல் நீர் நிரும்பிய டம்ளரை வைத்துக் கொண்டு நீர் சிந்தாமல் அதே கையாலயே அப்துல் கலாம் படத்தை வரைந்தார்.
இதையடுத்து ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களின் கனவுத் திட்டங்களில் ஒன்றான நதிநீர் இணைப்பு திட்டம் ஒன்றாகும். கலாம் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசும்போது நதிநீர் இணைப்பு, அவசரம், அவசியம் குறித்துப் பேசியுள்ளார். மற்றும் நதிகளை இணைப்பது தமிழ்நாட்டிற்கு மிகவும் அவசியம் எதிர்காலத்தில் தண்ணீருக்காக போர் மூளும் அபாயமும் இருப்பதாக கூறினார்.
எதிர்கால தண்ணீர் தேவைகளை பூர்த்தி செய்ய உடனடியாக செய்யவேண்டியது நதிநீர் இணைப்பு திட்டம்தான். எனவே அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நதிநீர் இணைப்பு திட்டத்தை நினைவு கூறும் வகையிலும், செயல்படுத்தி வேண்டியும் பகுதிநேரம் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் தன் கையில் மேல் நீர் நிரம்பிய டம்ளரை வைத்துக் கொண்டு அதே கையாலே பிரஷ் பிடித்துக்கொண்டு எட்டு நிமிடங்களில் நீர் சிந்தாமல் அப்துல் கலாம் அவர்களின் உருவத்தை வரைந்தார். பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்களுக்கு பாராட்டுக்கள் தெரிவித்தார்கள்.
இதையும் படிங்க:22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு- எங்கெல்லாம் தெரியுமா?