சென்னை ஐஐடி கல்லூரியில் இரண்டாமாண்டு படிக்கும் மாணவி ஒருவர் நேற்று முன்தினம் (நவ.12) இரவு வளாகத்தில் நடந்து சென்றார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் மாணவியிடம், இரவு நேரத்தில் தனியாக செல்ல வேண்டாம், பைக்கில் ஏறுங்கள் எனக்கூறி, அந்த நபர் தொடர்ந்து மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த அந்த மாணவி காவலாளியிடம் இளைஞர் தவறாக நடக்க முயற்சித்தது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் பேரில் ஐஐடி வளாகத்தில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஐஐடியில் பெயின்டராக பணியாற்றி வந்த வேளச்சேரி பகுதியைச் சேர்ந்த வசந்த் எட்வர்ட்(30) என்பவர், போதையில் மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்தது தெரியவந்தது.
இதனையடுத்து பாதுகாப்பு அலுவலர் அன்பழகன் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் அளித்தப் புகாரின் பேரில், மாணவியிடம் தவறாக நடக்க முயற்சி செய்ததாக வசந்த் எட்வர்டை இன்று (நவ.14) காவல் துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட வசந்த் எட்வர்டை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: விவாகரத்து வதந்தி; சோயிப் மாலிக்குடன் ரியாலிட்டி ஷோவை அறிவித்தார் சானியா மிர்சா