திருத்தணியைச் சேர்ந்த மணி என்ற கட்டுமான தொழிலாளி 2015ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், திருத்தனி – திருப்பதி சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனது கணவர் மரணத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி அவரது மனைவி தேன்மொழி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வி.சுதா, கட்டடத் தொழிலாளி மணியின் மரணத்துக்கு, அதிவேகமாக கார் இயக்கப்பட்டதும், அஜாக்கிரதையுமே காரணம் என்பது நிருபணமாவதால், 24 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் இழப்பீட்டை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் வழங்க, தனியார் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.
இதையும் படிங்க:வடபழனி அருகே கார் விபத்து: கல்லூரி மாணவர் பலி