சென்னை: உதவி இயக்குநராக தன்னிடம் பணிபுரிந்த தினகரன் சிவலிங்கத்தை, புதிய படம் மூலம் இயக்குநராக அறிமுகபடுத்துகிறார் இயக்குநர் பா. ரஞ்சித்.
இந்தப் படம் தமிழ்நாட்டில் தற்போதைய சூழலில் இருக்கும் முக்கிய பிரச்னையை மையமாகக்கொண்டு நகைச்சுவையோடு உணர்வுப்பூர்வமான கதையம்சத்துடன் உருவாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தை பா. ரஞ்சித்துடன் இணைந்து, பலூன் திரைப்படத்தை தயாரித்த, பலூன் பிக்சர்ஸ் டி. என் அருண்பாலாஜி தயாரிக்கவுள்ளார்.
படத்தில் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீலம் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியாகும் படங்களுக்கு மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உள்ள நிலையில் , சமீபத்தில் வெளிவந்த 'சார்பட்டா பரம்பரை' பெரும் வரவேற்பையும், வசூலையும் பெற்றுத்தந்தது.
அந்த வகையில் தற்போது முழுக்க முழுக்க நகைச்சுவையையும், உணர்வுப்பூர்வமான வாழ்வையும் மையப்படுத்தி தயாராகும் இந்தப் படம் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தியத்தேவனின் பணி நிறைவு - நடிகர் கார்த்தி!