ETV Bharat / state

'34 ரயில்கள் மூலம் 2,267.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வருகை' - தெற்கு ரயில்வே - etv bharat tamil news

சென்னை: தமிழ்நாட்டிற்கு 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2,267.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வந்துள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

ஆக்சிஜன்
ஆக்சிஜன்
author img

By

Published : May 30, 2021, 9:39 PM IST

தமிழ்நாட்டிற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2,267.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு வரப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் மதுரை கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தெற்கு ரயில்வே தமிழ்நாட்டிற்கு இதுவரை 34 சிறப்பு ரயில்கள் மூலம் 2,267.82 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் கொண்டு வந்துள்ளது. இன்று (மே.30) ஒரேநாளில் சட்டீஸ்கர், மகாராஷ்டிராவிலிருந்து 73.17 மற்றும் 80.44 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் சென்னைக்கு வந்துள்ளது.

கோயம்புத்தூர் மதுக்கரையில் 3 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் கையாளப்பட்டு 138.06 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் வாடிப்பட்டி, தூத்துக்குடி மீளவிட்டான் ரயில் நிலையங்களில் தலா ஒரு ஆக்ஸிஜன் விரைவு ரயில் கையாளப்பட்டு, அந்தப் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளுக்கு 158.13 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல் மதுரை கூடல்நகர் ரயில் நிலையத்தில் 2 ஆக்ஸிஜன் விரைவு ரயில்கள் கையாளப்பட்டு, 97.14 மெட்ரிக் டன் ஆக்ஸிஜன் மாவட்ட சுற்று வட்டாரப்பகுதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்திய ரயில்வே 313 ஆக்ஸிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்களை இயக்கி அதன்மூலம்; 1,274 டேங்கர்களில் 21,392 மெட்ரிக் டன் ஆக்ஸிஜனை நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதுவரை மகாராஷ்டிராவிற்கு 614 மெட்ரிக் டன்னும், உத்தரப்பிரதேசத்திற்கு சுமார் 3,797 மெட்ரிக் டன்னும், மத்தியப் பிரதேசத்திற்கு 656 மெட்ரிக் டன்னும், டெல்லிக்கு 5,476 மெட்ரிக் டன்னும், ஹரியானாவிற்கு 2,023 மெட்ரிக் டன்னும், ராஜஸ்தானுக்கு 98 மெட்ரிக் டன்னும், கர்நாடகாவிற்கு 2,115 மெட்ரிக் டன்னும், உத்தரகாண்டிற்கு 320 மெட்ரிக் டன்னும், தமிழ்நாட்டிற்கு 1,886.62 மெட்ரிக் டன்னும், ஆந்திராவிற்கு 1,738 மெட்ரிக் டன்னும், பஞ்சாபிற்கு 225 மெட்ரிக் டன்னும், கேரளாவுக்கு 380.2 மெட்ரிக் டன்னும், தெலங்கானாவிற்கு 1,858 மெட்ரிக் டன்னும், ஜார்க்கண்டிற்கு 38 மெட்ரிக் டன்னும், அஸ்ஸாமிற்கு 240 மெட்ரிக் டன்னும், திரவ மருத்துவ ஆக்ஸிஜன் ரயில் மூலம் வழங்கப்பட்டுள்ளது' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.