ETV Bharat / state

சென்னை மண்டலவாரியாக கரோனா முழு விவரம்

சென்னை: மண்டலவாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறித்த விவரத்தை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

chennai corona status
chennai corona status
author img

By

Published : Nov 12, 2020, 12:47 PM IST

சென்னையில் சில மண்டலங்களில் கரோனா தொற்று தீவிரமடைந்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை உயர்ந்துவருகிறது. கரோனா பரவலைத் தடுக்க கிருமிநாசினி தெளிப்பது, விழிப்புணர்வு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் இடங்களைத் தனிமைப்படுத்தி, அந்தப் பகுதிகளில் உள்ளவர்கள் தொடர்ந்து கண்காணித்துவருகின்றனர். தமிழ்நாட்டில் சென்னையில்தான் கரோனா பாதிப்பு அதிகம் இருந்துவருகிறது.

அந்த வகையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளான அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு போன்ற மண்டலங்களில்தான் கரோனா பாதிப்பு அதிகமாக இருந்துவருகிறது. இதில் அதிகபட்சமாக அண்ணா நகர் மற்றும் கோடம்பாக்கத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இந்தப் பரவலைக் குறைப்பதற்கு அந்தப் பகுதி முழுவதும் அதிக மருத்துவ முகாம்கள் மூலம் மக்களுக்குத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுவருகிறது.

சென்னை மாநகராட்சியில் கரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை இரண்டு லட்சத்து 5 ஆயிரத்து 982 ஆக இருக்கிறது. கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 97 ஆயிரத்து 091 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 5 ஆயிரத்து 750 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.

இந்தத் தொற்றால் இதுவரை மூன்றாயிரத்து 747 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் கரோனாவல் 50 முதல் 59 வயது உடையவர்கள் 19.78 விழுக்காடும், 40 முதல் 49 வயது உடையவர்கள் 16.52 விழுக்காடும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோரின் விழுக்காடு 95 ஆக உள்ளது.கரோனா தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள மக்களுக்கு உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டுவருகிறது.

இந்நிலையில் சென்னையில், மண்டல வாரியாக கரோனா பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில், சிகிச்சைப் பெற்றுவருபவர்களின் பட்டியலை இன்று (நவ. 12) சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன் விவரம் பின்வருமாறு :

கோடம்பாக்கம் - 21,286.

அண்ணா நகர் - 21,550.

ராயபுரம் - 17,578.

தேனாம்பேட்டை - 18,685.

தண்டையார்பேட்டை - 15,401.

திரு.வி.க. நகர் - 15,245.

அடையாறு - 15,491.

வளசரவாக்கம் - 12,550.

அம்பத்தூர் - 13,874.

திருவொற்றியூர் - 5,870.

மாதவரம் - 7,079.

ஆலந்தூர் - 7,886.

சோழிங்கநல்லூர் - 5,366.

பெருங்குடி - 7,177.

மணலி - 3,126.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.