ETV Bharat / state

’இரண்டு மாதங்களில் 2.52 கோடி அபராதம் வசூல்’ - சென்னை மாநகராட்சி தகவல்

தமிழ்நாடு அரசின் கரோனா தொற்று தடுப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள் மற்றும் தனி நபர்களிடமிருந்து 2.52 கோடி ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளது.

violating Covid rules
violating Covid rules
author img

By

Published : Jun 8, 2021, 8:37 PM IST

சென்னை: பொது இடங்களில் அரசின் பாதுகாப்பு வழிமுறைகளான முகக்கவசம் அணிதல், இரண்டு மீட்டர் அளவுக்கு தனி மனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், வணிக வளாகங்களின் வாயிலில் கிருமிநாசினி திரவங்கள் வைத்தல் போன்ற வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற, சென்னை மாநகராட்சியின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேற்கண்ட கரோனா தொற்று விதிமுறைகளை பின்பற்றாத வணிக நிறுவனங்கள், உணவகங்கள், அங்காடிகள் உள்ளிட்டவற்றிற்கு மாநகராட்சி அலுவலர்கள் அபராதம் விதித்து வருகின்றனர். அதைப் போலவே முகக்கவசம் அணியாத தனி நபர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

அபராதம் வசூல்

அந்த வகையில், சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள், முகக்கவசம் அணியாத தனி நபர்களிடமிருந்து ஏப்ரல் 8ஆம் தேதி முதல் இன்று (ஜூன்.08) வரை மொத்தம் இரண்டு கோடியே 52 லட்சம் ரூபாய் அபராதத் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளுக்கு சீல்

மேலும் கரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றாத காரணத்தால், சென்னையில் 906 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இறப்புச் சான்றிதழில் சரியான காரணத்தை குறிப்பிட வேண்டும் - எடப்பாடி பழனிசாமி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.