ETV Bharat / state

புத்தாண்டு கொண்டாட்டம்; தமிழகம் முழுவதும் 54 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு! - tn dgp

2024 New Year Celebration: புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சுமார் 54 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

டிஜிபி சங்கர் ஜிவால்
dgp shankar jiwal
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 31, 2023, 5:01 PM IST

சென்னை: இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்ட அறிக்கையில், "உலகம் முழுவதும் இன்று நள்ளிரவு 2024 புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், இன்று இரவு முதல் நாளை காலை வரை தமிழ்நாடு முழவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும், சாலை விபத்துக்கள் மற்றும் இதர அசம்பாவிதங்களைத் தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனால் தமிழ்நாடு முழுவதும் சுமார் 54 ஆயிரத்து 627 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். முக்கிய சுங்கச்சாவடிகள் தமிழக - புதுச்சேரி எல்லை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், முக்கிய சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்பட்டுள்ளன. மேலும், வாகன விபத்துகள் ஏற்படாமல் தடுக்கும் விதமாக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு, வாகன சோதனை நடத்தப்படவுள்ளது.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவோர், அதி வேகமாகவும், அஜாக்கிரதையாகவும், அதிக சத்தத்துடன் வாகனம் ஓட்டுவோர் ஆகியோர் மீது உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான அனுமதி பெற்றவர்கள், காவல் துறையினரால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நேர அளவுகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பொதுமக்கள் கூடும் இடங்கள், கேளிக்கை விடுதிகள், முக்கிய சாலை சந்திப்புகள், கடை வீதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களைக் கண்காணித்தல், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்தல், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி ஒழுங்கு செய்தல் ஆகிய பணிகளில் தமிழ்நாடு முழுவதும் காவல் துறையினர் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்" என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2024 புத்தாண்டு கொண்டாட்டம்:புதுச்சேரியில் கடற்கரையில் குவியும் சுற்றுலா பயணிகள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.