ETV Bharat / state

குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பா? 26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் - ஆவடி கமிஷனர் உத்தரவு! - குட்கா பறிமுதல்

Gutka saleas issue: குட்கா விற்பனையாளர்களுடன் தொடர்பில் இருந்ததாக ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்து, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Gutka saleas issue
26 காவலர்கள் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 22, 2023, 10:08 AM IST

சென்னை: ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட ஆவடி, அம்பத்தூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று குட்கா விற்பனை தொடர்பான சோதனை நடைபெற்றது. அதில், 113 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், 23 கடைகள் சீல் வைக்கப்பட்டு, 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, குட்கா விற்பனை செய்பவர்களுடன் தொடர்பில் இருந்ததாகக் கூறப்பட்ட 2 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 24 காவலர்களை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி, ஆவடி காவல் ஆணையாளர் சங்கர் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார். மேலும் குட்கா விற்பனை செய்பவர்கள், அதற்கு துணை புரியும் காவலர்கள் மீது நடவடிக்கை தொடரும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதையும் படிங்க: “மாட்டிறைச்சி சாப்பிடுவாயா?” - இஸ்லாமிய பள்ளி மாணவியை ஆசிரியர் துன்புறுத்தியதாக புகார்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.