ETV Bharat / state

சென்னையில் கடைகளை மூட உத்தரவு :வெறிச்சோடி கிடக்கும் தி.நகர்

சென்னை: கோவிட் -19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்க சென்னையில் உள்ள அனைத்து பெரிய வணிக நிறுவனங்களும் மார்ச் 31ஆம் தேதி வரை மூட சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

shop closed
shop closed
author img

By

Published : Mar 18, 2020, 2:57 PM IST

கோவிட்-19 வைரஸ் தொற்றின் காரணமாக உலகளவில் இதுவரை 1,79,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்தாண்டு இறுதியில் சீனாவின் வூஹான் நகரில் பரவத்தொடங்கிய கோவிட்-19 வைரஸ் தொற்று, தற்போது உலகத்தையே ஸ்தம்பிக்கச் செய்துள்ளது. குறிப்பாக, சீனாவைத் தவிர இத்தாலி, ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.

இந்தியாவை பொருத்தவரையில் மூன்று பேர் உயிரிழந்த நிலையில், 147 பேர் கோவிட்-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை, கோவிட் -19 வைரஸ் தொற்றால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், தமிழ்நாடு அரசு கோவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பள்ளி, கல்லூரி விடுமுறை, வணிக வளாகங்கள், திரையரங்கம் ஆகியவை மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட வேண்டும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்கு, வணிக வளாகங்கள் மூடப்பட்டன. இதனால் சென்னையில் உள்ள அனைத்து பெரிய வணிக நிறுவனங்களும் மார்ச் 31-ஆம் தேதி வரை மூட வேண்டும்.

உத்தரவை மீறி கடைகள் திறந்திருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையின் பிரதான சந்தையான தியாகராயநகர் ரங்கநாதன் தெருவில் மக்கள் கூட்டம் குறைந்து காணப்படுகிறது. இருப்பினும் கடைகளை மூடும் இந்த உத்தரவு முன்னறிவிப்பின்றி இன்று காலை வந்ததால் பொதுமக்கள், வியாபாரிகள் மத்தியில் குழப்பம் நீடித்து வருகிறது.

தி நகரில் மூடப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ்
தி நகரில் மூடப்பட்ட சரவணா ஸ்டோர்ஸ்

ஏராளமான மக்கள் கடைகளுக்கு வந்துவிட்டு மூடப்பட்டிருப்பதை அறிந்து திரும்பி செல்கின்றனர். அதேபோல பெரிய கடைகளை மட்டுமே மூட வேண்டுமென சென்னை மாநகராட்சி உத்தரவு இருந்தாலும் சென்னை தி.நகர் பகுதியில் அதிகளவு மக்கள் நெருக்கமாக கூடுவர் என்பதால் இந்த பகுதியில் உள்ள சிறிய கடைகளையும் மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

இதையும் படிங்க: இத்தாலியிலிருந்து திரும்பிய இருவருக்கு கரோனா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.