ETV Bharat / state

அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு - தீர்ப்பை தள்ளிவைத்த நீதிமன்றம் - எடப்பாடி பழனிசாமி

அதிமுக அலுவலகத்துக்குச் சீல் வைத்ததை எதிர்த்து எடப்பாடி பழனிசாமியும், பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீதான தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து ஈபிஎஸ், ஓபிஎஸ் மனு

author img

By

Published : Jul 15, 2022, 8:25 PM IST

சென்னை வானகரத்தில் கடந்த ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. அப்போது, சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் முன், எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோரது ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர்.

இந்த வன்முறை சம்பவத்தை அடுத்து, கட்சி அலுவலகத்துக்குச் சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் தரப்பில் தனித்தனியாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் நேற்று (ஜூலை 14) விசாரணைக்கு வந்தபோது, ஜூலை 11ஆம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய காவல் துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 15ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று (ஜூலை 15) இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதி என். சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தென் சென்னை வருவாய் கோட்டாட்சியர் சாய் வர்தினி மற்றும் ராயப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் கண்ணன் ஆகியோரிடம் அறிக்கைகளையும், வீடியோ, சிசிடிவி மற்றும் போட்டோ ஆதாரங்களையும் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் இ. ராஜ் திலக் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து வாதிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர் ராஜ் திலக், காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு, வன்முறையைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன. அதிமுக தலைமை அலுவலகம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பாக எந்த நீதிமன்றங்களிலும் வழக்கு நிலுவையில் இல்லை. வழக்கு நிலுவையில் இருந்தால் சீல் வைக்க முடியாது எனவும்; பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் மட்டுமே சீல் வைக்கப்பட்டது எனவும் விளக்கமளித்தார்.

மேலும், தற்போது இரு தரப்பினருக்கும் இடையில் சமாதானம் ஏற்படவில்லை எனவும் மீண்டும் பிரச்னை ஏற்படாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதால் பொது அமைதி, மக்கள், பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்கருதி சீல் வைத்த உத்தரவை ரத்து செய்யக்கூடாது எனவும் வாதிட்டார்.

சீல் வைத்ததை எதிர்த்து சம்பந்தப்பட்ட அலுவலரையோ, சிவில் நீதிமன்றத்தையோ மட்டுமே அணுகலாம் என நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்ட காவல் துறை தரப்பு வழக்கறிஞர், இதுவரை மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை கண்டுபிடிக்க கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

வன்முறையில் 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய காவல் துறை வழக்கறிஞர், பொது சொத்துகள் சேத தடுப்பு சட்டப்பிரிவுகளின் கீழும் வழக்குப்பதியப்பட்டுள்ளதாகவும், இழப்பீட்டை வசூலிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சம்பவ இடத்தில் பன்னீர்செல்வத்தின் பாதுகாப்பு வீரர்களை தவிர வேறு எந்த காவல் துறையினரும் இல்லை, என்ன நடந்தது என்பதற்கு வீடியோ ஆதாரங்களே போதுமானது எனவும் தெரிவித்தார்.

கட்சி அலுவலகம் அவருக்குச் சொந்தமானதாக இருந்தால் அவர் ஏன் அலுவலக கதவை உடைத்து கோப்புகளை எடுத்து செல்ல வேண்டும்? என கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிசாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், சம்பவம் நடந்த தேதியில் கட்சியின் தலைமை நிலையச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தான் என்பதை பன்னீர்செல்வம் தனது மனுவில் ஒப்புக் கொண்டுள்ளதாக குறிப்பிட்டார்.

பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஏ. ரமேஷ், பி.ஹெச். அரவிந்த் பாண்டியன் ஆகியோர் காவல் துறை அறிக்கை குறித்து ஆட்சேப மனுவைத் தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். கட்சியில் தனது பதவி என்ன என்பதை கட்சி அலுவலக உரிமை தொடர்பான விசாரணையில் தீர்மானிக்க முடியாது எனவும் பெரும்பான்மையான பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள் ஆதரவு உள்ளதால் மட்டுமே தொண்டர்கள் அனைவரும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பதாக கருத முடியாது.

கட்சி அலுவலகத்தின் உரிமை யாருக்கு என்பதை உரிமையியல் நீதிமன்றம் தான் முடிவு செய்ய முடியும் எனவும் கட்சி அலுவலகம் யாரிடம் இருக்கிறது என்று தான் ஆர்.டி.ஓ பார்க்க வேண்டுமே தவிர யாருக்கு உரிமை உள்ளது என்பதை தீர்மானிக்க முடியாது. இரு தரப்பினருக்கும் இடையே உள்ள சர்ச்சையை நீதிமன்றத்தால் மட்டுமே தீர்க்க வேண்டும் என்பதால், அதுவரை அலுவலகத்தை மூடி வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்தார்.

பொதுக்குழு நடக்கும்போது மாநிலம் முழுவதும் இருந்து கட்சியினர் வருவர் என்பதால் கட்சி அலுவலகத்தை பூட்டி வைக்கும் பழக்கம் இல்லை எனவும்; அப்படி தனது ஆதரவாளர்களுடன் அங்கு சென்றதாகவும் ஆனால் பழனிசாமி தரப்பின் நான்கு மாவட்டச்செயலாளர்கள் வெளியில் அமர்ந்துகொண்டு உள்ளே நுழைவதைத் தடுத்ததாகவும் பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள் குற்றம்சாட்டினர்.

கட்சி அலுவலகத்திற்குள் நுழைய முடியாது என்று எந்த நீதிமன்றமும் கூறவில்லை எனத் தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு மூத்த வழக்கறிஞர்கள், பொதுக்குழுவுக்கு அனுமதியளித்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, காவல் துறை அறிக்கைக்கு ஆட்சேபம் தெரிவித்து மனுதாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு திங்கள்கிழமை (ஜூலை 18) அவகாசம் வழங்கிய நீதிபதி, இருவரின் மனுக்கள் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.

இதையும் படிங்க: பத்திரப்பதிவு துறையில் ஊழல்? - அறப்போர் இயக்கம் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.