ETV Bharat / state

எல்லையில் கேரளா டிஜிட்டல் நில அளவை மேற்கொள்கிறதா என கண்காணிக்க உத்தரவு! - border problems

கேரளா தமிழ்நாடு இரு மாநில பொது எல்லையில் டிஜிட்டல் நில அளவையை கேரளா அரசு மேற்கொள்கிறதா என தமிழ்நாடு வனச்சரகர்கள் கண்காணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கேரளா தமிழ்நாடு எல்லையில் கேரளா டிஜிட்டல் நில அளவை மேற்கொள்கிறதா என கண்காணிக்க உத்தரவு

author img

By

Published : Nov 10, 2022, 11:02 PM IST

சென்னை: தமிழ்நாடு மற்றும் கேரளா மாநில எல்லையில் கேரள அரசு டிஜிட்டல் முறையில் மறுநிலை அளவை பணியினை நவம்பர் ஒன்றாம் தேதி முதல் துவங்கி உள்ளதாக செய்திகள் வருவதாக தமிழக அரசு கூறியுள்ளது.

கேரளா மாநிலம், தொடுபுழா மறுநில அளவை அலுவலக உதவி இயக்குநர், தமிழ்நாடு மற்றும் கேரள மாநில பொது எல்லையில் அமையப்பெற்ற கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், உடும்பன் சோலை வட்டத்தினைச் சார்ந்த சின்னக்கானல், சதுரங்கப்பாறை, கருணாபுரம், சாந்தான்பாறை ஆகிய கிராமங்களில் டிஜிட்டல் நில அளவை பணிகள் முதற்கட்டமாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளார்.

அதனைத்தொடர்ந்து, அந்த கிராமங்களின் இருமாநில பொது எல்லைகள், தேனி மாவட்டத்தில் அமையப்பெற்றுள்ளதால் அது தொடர்பான அரசின் பழைய பதிவேடுகளில் உள்ள பழைய அளவுகளை சரிபார்த்திட கூட்டம் நடத்துவதற்கு, தேனி மாவட்டத்தின் நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநருக்கு உத்தரவிட்டு அனைத்து ஆவணங்களையும் தயார் செய்துவிட்டு, கேரள அரசிற்கு கடிதம் அனுப்பியுள்ளதாகவும் தெரிகிறது.

அதன் பின் இரு மாநில அதிகாரிகளும் கூட்டு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பும் விடுக்கப்பட்ட நிலையில், தமிழ்நாடு - கேரள இருமாநில பொது எல்லையில் எவ்விதமான டிஜிட்டல் நிலஅளவை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை என தேனி வனக்கோட்டம் மாவட்ட வன அலுவலர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

எனினும், தமிழ்நாடு வனச்சரகர்களை இரு மாநில பொது எல்லையில் கேரள அரசினால் டிஜிட்டல் நிலஅளவை தொடர்பான பணிகள் மேற்கொள்ளப்படுகிறதா, என்பதை தொடர்ந்து கண்காணித்து அறிக்கை சமர்ப்பித்திட தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை செயலாளர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தாக்குதல் நடத்த ஆன்லைன் மூலம் வெடிபொருட்கள் வாங்கியதாக என்.ஐ.ஏ தகவல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.