கரோனா வைரஸ் பரவல் காரணமாக மார்ச் 24ஆம் தேதியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதனால், தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் பணிபுரியும் பிற மாநில, மாவட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்கள் அவர்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.
அதையடுத்து, தற்போது 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் மே 27ஆம் தேதியும், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ஜூன் 15ஆம் தேதியும் தொடங்கவுள்ளதால் பிற மாநிலம், மாவட்ட ஆசிரியர்கள் பணிபுரியும் மாவட்டத்திற்கு வரவேண்டும் என உத்தரவிடப்பட்டது.
அதனால் ஆசிரியர்களிடையே இ-பாஸ் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்பட்டுவருகிறது. அதனை சரி செய்ய பள்ளிக் கல்வித் துறை பிற மாநில மாவட்ட ஆசிரியர்களை பணிபுரியும் மாவட்டத்திற்கு அழைத்துவருவதற்காக அவர்களின் விவரப் பட்டியலை அளிக்க முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையனிடம் உதயநிதி ஸ்டாலின் நேரில் மனு!