ETV Bharat / state

13,331 ஆசிரியர் பணியிடங்களை காலி தொகுப்பூதியத்தில் ஓராண்டிற்கு நிரப்ப உத்தரவு! - அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில்

தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13,331 பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

13331 ஆசிரியர் பணியிடங்களை காலி தொகுப்பூதியத்தில் ஓராண்டிற்கு நிரப்ப உத்தரவு!

author img

By

Published : Jun 23, 2022, 10:49 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்க நடுநிலை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 13331 பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மூலம் தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ளலாம் என பள்ளிக்கல்வித் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நியமனம் செய்யப்படும் இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும், இவர்களுக்கு மதிப்பூதியம் மட்டுமே வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பள்ளிக் கல்வித்துறையின் மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டாலோ, பதவி உயர்வு மூலம் ஆசிரியர்கள் அந்த பணியிடத்தில் வேலை செய்ய விருப்பப்பட்டாலோ தற்காலிகமாக நியமிக்கப்படும் ஆசிரியர்கள் உடனடியாக பணியில் இருந்து நீக்கப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பணியிடங்கள் நிரப்பப்படும்போது இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியரில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இருந்தால் அவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டுமெனவும், அவ்வாறு தகுதி பெற்றவர்கள் இல்லை என்றால் இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணிபுரிந்த தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டுமென அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனம் செய்யும்போது ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பட்ட தேர்வில் பங்கேற்று, சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்றும்; அவ்வாறு இல்லாவிட்டால் ’இல்லம் தேடி கல்வித் திட்டத்தில்’ பணி புரிந்த தன்னார்வலர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஓராண்டிற்கு ஆசிரியர்களை மதிப்பு ஊதியத்தின் அடிப்படையில் நியமிப்போம் எனக் கூறியுள்ளது வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு, நகராட்சி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்கள் 2023 மார்ச் மாதம் நடைபெற உள்ள அரசு பொதுத் தேர்வை எழுத உள்ளனர்.

அவர்களின் நலனை கருத்தில் கொண்டும் பொதுத்தேர்வுக்கு முழுமையாக தயார் செய்வதற்கு உதவும் வகையிலும் அரசு மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைக் கருத்தில் கொண்டு தான் பட்டதாரி முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு உடனடியாக மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

அதேபோல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகளில் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை “எண்ணும் எழுத்தும்” திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இடைநிலை ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்பிடவும் மாற்று ஏற்பாடு செய்ய வேண்டியுள்ளது.

தொடக்கக் கல்வித் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கேட்கப்பட்டுள்ளது. மேலும் பதவி உயர்வு வழங்குவதற்கான நடவடிக்கையையும் நிறைவுற்று காலிப்பணியிடம் நிரப்ப சிறிது காலமாகும்.

பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பள்ளி மேலாண்மை குழு மூலம் தற்காலிக ஏற்பாடாக ஜூலை 1ஆம் தேதி முதல் ஆசிரியர் பணிக்கு தகுதி பெற்ற நபர்களின் விவரங்களின் அடிப்படையில் நிரப்பிக்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை விவரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 4989 இடைநிலை ஆசிரியர்கள், மற்றும் அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை பதவி உயர்வு மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து நிரப்பப்படும் வரை ஜூலை 2022 முதல் ஏப்ரல் 2023 வரை 10 மாதங்களுக்கும், அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள 3188 முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஜூலை 2022 முதல் பிப்ரவரி 2023 வரை எட்டு மாதங்களுக்கு மட்டும் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் அந்தந்த ஊர்களில் பள்ளி அமைந்துள்ள பகுதி மற்றும் அருகாமையில் உள்ள பகுதியிலுள்ள தகுதியுள்ள நபர்களை சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் குழு அமைத்து தற்காலிகமாக நிரப்பிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

அவ்வாறு தேர்வு செய்யப்படும் பொழுது இது முற்றிலும் தற்காலிகமானது என்பதை நியமனம் செய்யப்படும் நபர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.

மாத மதிப்பூதியம் தற்காலிகமாக பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமனம் செய்யப்படும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாதம் 7,500 ரூபாயும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 10,000 ரூபாயும், முதுகலை ஆசிரியர்களுக்கு மாதம் 12,000 ரூபாய் மதிப்பூதியம் வழங்கப்படும்.

அந்தந்த ஆசிரியர் பணிக்கு தகுதியான நபர்களை பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும். சம்பந்தப்பட்ட பாடத்திற்கு தகுதியான நபர்களை மட்டுமே குழுவின் மூலம் எந்தவித புகாருக்கும் இடமின்றி தேர்வு செய்து நிரப்பிக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்து ஆசிரியர்கள் நிரப்பப்படும் வரையோ அல்லது பதவி உயர்வு மூலம் நிரப்பப்படும் வரை தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படும் ஆசிரியர் அந்த காலகட்டத்திற்கு உட்பட்ட பாடங்கள் அனைத்தும் நடத்தி முடிக்கப்பட வேண்டும்.

ஆசிரியர்களுக்கு உரிய மதிப்பூதியம் ஒப்புகை சீட்டு மூலம் வழங்கப்பட வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவின் மூலம் நியமிக்கப்படும் ஆசிரியர் பணியிடத்திற்கு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் ஆசிரியர் நியமனம் செய்தாலோ பதவி உயர்வு மூலம் ஆசிரியர் நியமனம் செய்யப்பட்டாலோ உடனடியாக பள்ளி மேலாண்மை குழுவால் நிரப்பப்படும் ஆசிரியர் பணி விடுப்பு செய்யப்பட வேண்டும்.

ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் தகுதி பெற்ற இடைநிலை பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின் அவர்களை நியமிக்க வேண்டும். முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு தேர்வு எழுதி தகுதி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு வரை சென்றவர்கள் இருந்தால் அவர்களை நியமனம் செய்ய வேண்டும். அவ்வாறு தகுதியான நபர்கள் இல்லாவிட்டால் இல்லம் தேடி கல்வித்திட்டத்தில் பணிபுரிந்து வரும் தன்னார்வலர்களை நியமிக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிகபட்சமாக 1748 காலி பணியிடங்களும், மதுரை மாவட்டத்தில் 1593 காலி பணியிடங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 1154 காலி பணியிடங்களும், விழுப்புரம் மாவட்டத்தில் 775 காலி பணியிடங்களும், வேலூரில் 466 காலி பணியிடங்களும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் 694 காலி பணியிடங்களும், கடலூர் மாவட்டத்தில் 510 காலி பணியிடங்களும், தர்மபுரி மாவட்டத்தில் 511 காலி பணியிடங்களும் கல்வியில் பின்தங்கிய மாவட்டங்களில் அதிக அளவில் காலிப்பணியிடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.