ETV Bharat / state

புகையிலை பொருள்களால் ஏற்படும் வாய் புற்றுநோயை தவிர்க்கலாம்.. பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் - வாய் புற்றுநோய்

புகையிலை பொருள்களை உண்பதால் ஏற்படும் வாய் புற்றுநோயை தவிர்க்க பற்களை சுத்தமாக பராமரித்தால் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடியும் என தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் விமலா தெரிவித்துள்ளார்.

Etv Bharat வாய் புற்றுநோயை தவிர்க்கலாம்
Etv Bharat வாய் புற்றுநோயை தவிர்க்கலாம்
author img

By

Published : Aug 17, 2022, 10:28 PM IST

Updated : Aug 18, 2022, 4:00 PM IST

சென்னை: தமிழ்நாடு பால் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 1953ஆம் ஆண்டு முதல் தொடங்கப்பட்ட செயல்பட்டு வருகிறது. பல் மருத்துவக் கல்லூரியின் 69ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு பல் மருத்துவ கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்தப் பல் மருத்துவக் கண்காட்சியில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பற்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கப்படுகிறது. மேலும் பல் சொத்தை எவ்வாறு தவிர்ப்பது என்பது குறித்தும், குழந்தைகளுக்கு பற்களை எவ்வாறு பராமரிக்க வேண்டும் என்பது குறித்தும், புகயிலை பொருட்களால் உண்பதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் கண்காட்சியில் விளக்கப்பட்டிருந்தன.

இது குறித்து தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் விமலா ஈடிவி பாதத்திற்கு அளித்த சிறப்பு பெட்டியில், “தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியின் சார்பில் பல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இரண்டு நாட்கள் கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சமுதாயத்தில் மிகவும் அதிகமாக காணப்படும் நோய் பல் ஈறு நோயாகும். என்பது சதவீத மக்களுக்கு பல் சொத்தை மற்றும் ஈறு நோய் உள்ளது.

முறையாக பற்களை சுத்தம் செய்ய வேண்டும். பற்களில் ஒட்டக்கூடிய பொருட்களை உண்டால், மீண்டும் பற்களை சுத்தம் செய்ய வேண்டும். மனித உடலில் ஏற்படும் நோயினை வாயில் பார்த்து அறிய முடியும். அதேபோல் பற்களில் நோய் பாதிப்பு ஏற்பட்டாலும் உடலில் நோய் பாதிப்பு ஏற்படுவதை கண்டறிய முடியும். புகையிலைப் பொருள்களை உண்பதால் வாய் புற்றுநோய் ஏற்படும்.

மேலும் சரியான அமைப்புடன் இல்லாத பற்கள் உதடுகளில் பட்டு புண் ஏற்பட்டால் அதுவும் புற்றுநோயாக மாறும். ஆரம்ப நிலையிலேயே இதனை கண்டறிந்தால் சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். பல் சொத்தை மற்றும் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பினை வேர் சிகிச்சை மூலம் முழுமையாக குணப்படுத்திட முடியும். புகையிலை பொருள்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனையும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு பல் மருத்துவக் கல்லூரியின் முதல்வர் விமலா

பள்ளி குழந்தைகள் உண்ணும் சாக்லேட், பீட்சா பர்கர் போன்ற பொருள்கள் பற்களில் ஒட்டிக் கொள்வோம் அதனை முழுவதுமாக சுத்தம் செய்ய வேண்டும். இது போன்று பற்களில் ஒட்டிக் கொள்ளும் பொருட்கள் மூலமும் நோய் தொற்று ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. பற்களில் எந்தவித பிரச்சினை வந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கு சிகிச்சைப் பெற வேண்டும். பற்களை ஆண்டிற்கு ஒரு முறை மருத்துவரை அணுகி சுத்தம் செய்துகொள்ள வேண்டும்” என தெரிவித்தார்.

இதையும் படிங்க: அடுத்தது நான் தான்... சல்மான் ருஷ்டி சம்பவத்திற்குப் பின் தஸ்லிமா நஸ்ரினின் பேட்டி

Last Updated : Aug 18, 2022, 4:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.