ETV Bharat / state

கொங்கு மண்டலத்தில் மாநாடு..!; ஓபிஎஸ்-ன் வியூகம் என்ன..? - எடப்பாடி பழனிசாமி

கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்த ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டிருக்கும் நிலையில், இதன் மூலம் ஓபிஎஸ்-ன் வியூகம் என்ன என்பது குறித்து அரசியல் வட்டாராங்களில் கேள்வி எழுந்துள்ளது. தொடர் மாநாடு மூலம் மீண்டும் தனது செல்வாக்கை நிரூபிப்பாரா ஓபிஎஸ் என்பது குறித்து ஆராய்கிறது இந்த செய்தி தொகுப்பு.

கொங்கு மண்டத்தில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு
கொங்கு மண்டத்தில் ஓபிஎஸ் தரப்பு மாநாடு
author img

By

Published : Jul 3, 2023, 10:25 PM IST

நெருங்கும் மாநாடும்: ஓபிஎஸ்-யின் மாநாடும்: ஜூலை 1ஆம் தேதி நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் திருச்சி மாநாடு போன்று கொங்கு மண்டலத்திலும் மாநாடு நடத்த வேண்டும் என ஓபிஎஸ்ஸிடம் மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் வலியுறுத்தினர். இதற்கு ஒப்புதல் தெரிவிக்கும் விதமாக கொங்கு மண்டத்தில் விரைவில் மாநாடு நடத்தப்படும் என்றும், அதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் அறிவித்திருந்தார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதனால், அதற்கான முன்னெடுப்புகளை எடுக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

எடப்பாடியின் கோட்டையை அசைத்து பார்க்கும் ஓபிஎஸ்: இதன் ஒரு பங்காக, வருகின்ற ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக சார்பாக மதுரையில் மாநாடு நடத்த திட்டமிட்டுள்ளனர். அதற்கு முன்பாக எடப்பாடி பழனிச்சாமிக்கு செல்வாக்கு மிகுந்த பகுதியாக கூறப்படும், கொங்கு பகுதியில் மிகப்பெரிய மாநாட்டை நடத்த வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் இறங்கியுள்ளனர். மேலும், அதிமுக 2017ஆம் ஆண்டு பிரிந்த போது நமது எம்ஜிஆர் நாளிதழும், ஜெயா டிவியும் சசிகலா மற்றும் டிடிவி தரப்பினரிடையே சென்றது. அதற்கு பின்னர் 2022ஆம் ஆண்டு ஓபிஎஸ் - ஈபிஎஸ் என அதிமுக பிரிந்தபோது நமது அம்மா நாளிதழும், நியூஸ் ஜெ டிவியும் எடப்பாடி பழனிசாமி தரப்பினரிடையே சென்றது.

இதனால், நமது அறிவிப்புகள் மற்றும் நமக்கான செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்க நாளிதழும், செய்தி நிறுவனமும் ஆரம்பிக்க வேண்டும் என ஓபிஎஸ் தரப்பினர் அவரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு, விரைவில் ‘நமது புரட்சி தொண்டன்’ என்ற நாளிதழை தொடங்க உள்ளதாகவும் அதற்கு கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகராஜ் ஆசிரியராக நியமிக்கப்பட இருக்கிறார் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார். மேலும், எடப்பாடி பழனிசாமியுடன் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்றும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி தொடர்பாக டெல்லி பாஜக தலைவர்கள் பேசி வருகின்றனர் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

பாஜகவின் செல்வாக்கு பெற்றாரா ஓபிஎஸ்?: ஓபிஎஸ்-ன் திடீர் உற்சாகத்திற்கு என்ன காரணம் என அவருடைய தரப்பின் இரண்டாம் கட்ட தலைவர் ஒருவரிடம் விசாரித்த போது, “டெல்லி பாஜக தலைவர்கள் எங்கள் அணிக்கு கிரீன் சிகினல் காட்டியுள்ளனர். அடுத்தடுத்த மாநாடு நடத்தவும் தென் மாவட்டங்களில் தேர்தலுக்கான பணிகளை தொடங்கவும் கூறியுள்ளனர். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்த போது அதிமுகவின் டெல்லி முகமாக கருதப்பட்டவர் மைத்ரேயன். அதிமுக எங்கள்(ஓபிஎஸ்) - ஈபிஎஸ் அணிகள் பிரிந்த போது மாறி மாறி தாவிய மைத்ரேயன், தற்போது இறுதியாக பாஜகவில் இணைந்துள்ளார்.

தற்போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரேயனை மையமாக வைத்து டெல்லி பாஜக தலைவர்களிடம் ஓபிஎஸ் பல செயல்பாடுகளை செய்து வருகிறார். மேலும், ஓபிஎஸ் மகன் ரவிந்திரநாத் எம்.பியும், டெல்லி பாஜக தலைவர்களிடம் நெருக்கமாக இருந்து வருகிறார். இதன் மூலம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இணைந்து விடலாம் என நாங்கள் தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறோம். இதனால், பாஜக கூட்டணியில் எடப்பாடி பழனிச்சாமி இணைவாரா? என்ற குழப்பம் ஏற்படும். அந்த குழப்பத்தால் மீண்டும் அதிமுகவில் இணையும் சூழல் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நகர்ந்து கொண்டிருக்கிறோம்” என கூறினார்.

ஈபிஎஸ்-க்கு ஸ்கெச் போடும் ஓபிஎஸ்: அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் ஓபிஎஸ் தரப்பினர் சந்திப்பை நிகழ்த்தி இருக்கும் நிலையில், அடுத்ததாக சசிகலாவை சந்திக்க திட்டமிட்டுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக எந்தெந்த வழிகளில் வியூகம் அமைக்க முடியுமோ அனைத்தையும் பயன்படுத்த ஓபிஎஸ் அணியினர் தயாராகி வருகின்றனர். ஓபிஎஸ் இளைய மகன் ஜெயபிரதீப்பை தேனி மாவட்ட செயலாளராக்க கட்சி நிர்வாகிகளிடையே ஓபிஎஸ் கருத்து கேட்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெயபிரதீப்பை பொறுத்தவரை நேரடி அரசியலில் இறங்காவிட்டாலும் தொண்டர்களுக்கான சுப நிகழ்ச்சிகள், துக்க நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார் என்ற பெயர் இருப்பதாக கூறுகின்றனர்.

தற்போது ஓபிஎஸ்-ன் சொந்த மாவட்டமான தேனியில் அவருக்கான செல்வாக்கு இல்லாத நிலையில் ஜெயபிரதீப்பை மாவட்ட செயலாளராக ஆக்கும் பட்சத்தில், அந்த மாவட்டத்தில் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்றும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் ஓபிஎஸ்-ன் மூத்த மகன் ரவிந்திரநாத் தேனி தொகுதியில் போட்டியிட உதவியாக இருக்கும் என்றும் ஓபிஎஸ் கணக்கு போடுவதாக கூறப்படுகிறது. சசிகலா நேரம் ஒதுக்க தாமதப்படுத்துவதாக கூறப்படும் நிலையில், அவருடன் சந்திப்பிற்கான பணிகளை முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தை வைத்து ஓபிஎஸ் வேகப்படுத்தியுள்ளார்.

ஓபிஎஸ்-ன் வியூகம் வெற்றி பெறுமா?: மூத்த பத்திரிக்கையாளரின் கருத்து:

ஓபிஎஸ்-ன் அடுத்தகட்ட நகர்வு குறித்து பேசிய மூத்த பத்திரிகையாளர் பாபு ஜெயக்குமார், “ஓபிஎஸ் அணியினர் தானும் இருக்கின்றோம் என்பதை காட்டிக் கொள்ள கொங்கு மண்டலத்தில் மாநாடு, நாளிதழ் தொடக்கம் என்று கூறுகின்றனர். அதிமுகவில் இனி நமக்கு வேலை இல்லை என ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களுக்கே தெரிந்திருக்கும். சசிகலாவும் ஓபிஎஸ்சுடன் இணைவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் கூட்டணி நேரத்தில் மட்டுமே கைகோர்ப்பேன் என கூறிவிட்டார். கொங்கு மண்டலத்தில் மாநாடு நடத்தினாலும் அது ஓபிஎஸ்-ன் செல்வாக்கை மீட்டெடுக்குமா என்பது சந்தேகம்தான்.

இன்னும் பாஜக தங்கள் தரப்பை அதிமுகவில் இணைத்துவிடும் என்று ஓபிஎஸ் நம்புகிறார். ஆனால், பாஜகவை பொறுத்தவரை தேர்தல் அரசியலே பிரதானமானது. அதில் லாபம் கிடைக்கும் பட்சத்தில் மட்டுமே ஒன்றை தேர்வு செய்வார்கள். தொடர்ந்து செயல்படுவது மூலம் தென் மாவட்டங்களில் வெற்றி பெற முடியாது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமியின் வெற்றியை பாதிப்படைய செய்ய முடியும். அதுவும் கூட கூட்டணி பொறுத்தே செயல்பட முடியும். பாஜக - அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்ஸை இணைக்க ஈபிஎஸ் ஒப்புக்கொள்ள மாட்டார். நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியடையும் பட்சத்தில் அனைவரும் ஒன்றிணைய வாய்ப்புள்ளது” என கருத்து தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.