ETV Bharat / state

முன்னாள் துணை முதலமைச்சர் சகோதரர் உடல்நலக்குறைவால் உயிரிழப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

author img

By

Published : May 14, 2021, 9:46 AM IST

Updated : May 14, 2021, 11:25 AM IST

OPS brother
ஓபிஎஸ் சகோதரர்

அதிமுக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தின் உடன்பிறந்த இளைய சகோதரர் பாலமுருகன்(61). இவர், இன்று அதிகாலை 4 மணியளவில் பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

கடந்த சில ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்த பாலமுருகன், அதற்காக சென்னை, திருவனந்தபுரம் உள்ளிட்ட சில இடங்களில் சிகிச்சைப் பெற்று வந்தார். கடந்த 2018இல் ஜூலை 2ஆம் தேதி மதுரை அப்பல்லோவில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது.

அப்போது, சென்னைக்கு கொண்டு சென்றால் மட்டுமே உயிர் பிழைப்பார் என்ற நிலை ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் வேண்டுகோளை ஏற்று, அப்போதைய மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெங்களூரில் இருந்து ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டரை மதுரைக்கு அனுப்பினார்.

balamurugan died
மறைந்த பாலமுருகன்

பின்னர் அங்கிருந்து பாலமுருகனை ராணுவ ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டு, அங்கு அவருக்கு அவசர மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, பாலமுருகன் உயிர் பிழைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், தொடர்ந்து உடல்நிலை சரியில்லாமல் இருந்த அவர், திருவனந்தபுரத்தில் நீண்டகாலமாக சிகிச்சைப் பெற்றுவந்தார். இந்தநிலையில் இன்று(மே.14) அதிகாலை 4 மணியளவில் பெரியகுளம் தென்கரையில் உள்ள அவரது இல்லத்தில் உயிரிழந்தார். அவருக்கு லதா என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Last Updated : May 14, 2021, 11:25 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.