சென்னை: அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம், அக்கட்சியின் பொதுக்குழு விவகாரம், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவி யாருக்கு என்பன போன்ற பிரச்னைகள் ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தான் முதலமைச்சரை நேரில் சந்தித்ததை நிரூபித்தால், அரசியலை விட்டு விலகத்தயார் எனவும்; நிரூபிக்கவில்லை என்றால் எடப்பாடி பழனிசாமி விலகத்தயாரா? எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
மதுரைக்கு செல்வதற்காக சென்னை விமானநிலையத்திற்கு இன்று (அக்.20) வந்தபோது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், 'நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் அறிக்கை குறித்து என்னை பற்றி ஏதாவது விமர்சனம் வந்தால் கேளுங்கள் பதில் சொல்கிறேன். எடப்பாடி பழனிசாமி நடத்திய போராட்டம் எனக்கு எதிரானதாக கருதவில்லை.
முதலமைச்சருடன் 1 மணி நேரம் நான் பேசியதாக என்னை விமர்சிக்கிறார்கள். முதலமைச்சரை நான் சந்தித்ததை பழனிசாமி நிரூபிப்பார் எனில், அரசியலை விட்டு நான் விலகத் தயார். நிரூபிக்கவில்லை எனில் பழனிசாமி விலகத் தயாரா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: ஏங்க இருங்க - போலீஸ்காரர்களைப் பார்த்து கொந்தளித்த ஈபிஎஸ்