குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்.பியுமான திருமாவளவன் சென்னை வேளச்சேரியில் உள்ள அவரது அலுவலகத்தில் கோலம் போட்டு தமது எதிர்ப்பை தெரிவித்தார்.
சுமார் 25 நிமிடங்கள் அமர்ந்து முழு கோலத்தையும் அவரே போட்டு முடித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "இந்திய நாட்டில் எனது எதிர்ப்பை தெரிவிப்பதற்கு அரசியலமைப்பு சட்டம் இடம் தருகிறது. ஆனால் கருத்து சுதந்திரத்தைப் பறிப்பது கண்டனத்திற்குறியது. இதுவும் கருத்து சுதந்திரத்தின் ஒரு போராட்ட வடிவமே. கோலம் போடுவோர் மீது ஏவப்படும் அடக்குமுறையை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்" என்றார்.
மேலும், No CAA, No NPR, No NCR மட்டுமல்லாமல் No modi என்றும் மக்கள் கோலம் போட வேண்டும் எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: நீதித் துறை, ஊடகத் துறை என அனைத்திலும் பாஜகவின் அரசியல் தலையீடு!'