ETV Bharat / state

'ஆன்லைனில் முறையில் மாணவர்களுக்கு தேர்வு நடத்துக' - எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல் - எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி

கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்று இந்த ஒரு பருவத் (செமஸ்டர்) தேர்வை ஆன்லைன் முறையில் (online exam) நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி (Opposition leader Edappadi Palaniswami) வலியுறுத்தி உள்ளார்.

college student
college student
author img

By

Published : Nov 18, 2021, 6:27 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த சில நாள்களுக்கு முன் ஆன்லைன் முறையில் பருவத் (செமஸ்டர்) தேர்வை (online semester exam) நடத்த வேண்டும் எனப் போராட்டம் நடத்தினர்.

ஆனால் அரசு அனைத்து வகையான கல்லூரிகளிலும் நேரடி முறையில் தேர்வுகள் நடைபெறும் என அறிவித்தது. இதற்கு தற்போது பல்வேறு கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவர்களின் கோரிக்கையை ஏற்று ஆன்லைனில் தேர்வு நடத்த வேண்டும் எனக் கூறிவருகின்றனர்.

அந்த வகையில் எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி (Edappadi Palaniswami) இன்று (நவ.18) வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் கரோனா நோய்த் தொற்றின் காரணமாக சுமார் 20 மாதங்களுக்கும் மேலாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்காமல் மூடப்பட்டிருந்தன.

15 மாதங்களுக்கு மேலாக ஆன்லைன் வகுப்புகள் கூட நடத்தப்படாமல் இருந்தன. பிறகு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் கடைசி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மட்டும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

பாடங்கள் முழுமையாக நடத்தப்படவில்லை

கரோனா நோய்த் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு, இந்தியாவில் வசிக்கும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்ற நடைமுறையை கட்டாயமாக்கியது. இதன்படி தமிழ்நாட்டிலும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் கரோனா நோய்த் தொற்றினைத் தடுக்கும் வகையில் 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

தற்போது தமிழ்நாட்டில் கரோனா நோய் பாதிப்பு குறைந்து வருவதாகத்தெரிவித்த மாநில அரசு, படிப்படியாக கட்டுப்பாடுகளை தளர்த்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக கல்லூரிகளைத் திறந்து நேரடி வகுப்புகளை நடத்திட வேண்டும் என்ற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்த கோரிக்கையினை ஏற்று, இந்த அரசு கடந்த செப்டம்பர் மாதம் முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகளை படிப்படியாகத் திறந்து
வருகிறது.

இந்தச் சூழ்நிலையில் கல்லூரிகள் திறந்து சுமார் இரண்டரை மாதங்களே ஆனதாலும், முழுமையாக நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், பண்டிகைக் காலம், பருவ மழை என்று கல்லூரிகளுக்கு அடிக்கடி விடுமுறை அளிக்கப்படுவதாலும், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு இந்த செமஸ்டருக்குரிய பாடங்களை ஆசிரியர்கள் முழுமையாக முடிக்கவில்லை என்றும், எனவே, செமஸ்டர் தேர்வுக்கு முன் நடத்தப்படும் மாதிரி தேர்வுகள் இதுவரை நடத்தப்படவில்லை என்றும் மாணவர்கள் கூறுகின்றனர்.

மாணவர்கள் போராட்டம்

மேலும், இந்த பருவத் தேர்வுக்கான பருவத் தேர்வு பாடத்திட்டங்கள் (செமஸ்டருக்கான சிலபஸ்- Syllabus) இதுவரை முழுமையாக வழங்கப்படவில்லை என்றும், டிசம்பர் மாதம் செமஸ்டர் தேர்வுகள் நடைபெறவுள்ள நிலையில், டிசம்பர் மாதம் என்ன பாடம் நடத்தப்பட வேண்டும் என்ற பாடத்திட்டம் கல்லூரி பேராசிரியர்களுக்குக் கூட இதுவரை வழங்கப்படவில்லை என்றும், எனவே இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை முழுமையாக எங்களுக்கு ஆசிரியர்கள் நடத்தவில்லை என்றும் மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

கல்லூரிகளில் நடைபெற உள்ள வகுப்புகளுக்கு மாணவர்கள் நேரடியாக வரக்கூடிய சூழ்நிலை இருந்தாலும், பல மாணவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தாத காரணங்களால் கல்லூரிக்கு வரவில்லை.

கடந்த இரண்டு, மூன்று நாள்களாக பல மாவட்டங்களில் மாணவர்கள் நேரடி தேர்விற்கு தங்களது எதிர்ப்பைக் காட்டி, இந்த முறையும் ஆன்லைன் தேர்வுகள் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையினை அரசுக்கு வைத்து, வகுப்பை புறக்கணித்து, ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டும் வருகின்றனர்.

எனவே, அனைத்து கல்லூரி மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுள்ளனரா? என்றும், அனைத்து மாணவர்களும் கல்லூரிகளுக்கு வந்து பாடம் கற்கிறார்களா? என்பதையும் இந்த அரசு உறுதிப்படுத்த வேண்டும். அதன் பின்னர் நேரடி தேர்வு நடத்தினால் தான் மாணவர்கள் முழு திறமையோடு தேர்வை எதிர்கொள்ள முடியும்.

ஆன்லைனில் தேர்வுகளை நடத்துக

இந்த அரசு மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையினை பரிசீலித்து, போதிய நேரடி வகுப்புகள் நடைபெறாததாலும், இந்த செமஸ்டருக்குண்டான பாடத்திட்டம் (சிலபஸ்) இதுவரை வழங்கப்படவில்லை என்பதையும், இந்த செமஸ்டருக்குண்டான பாடங்களை மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிக்க முடியவில்லை என்பதையும், மாதிரித் தேர்வுகள் நடைபெறாததையும், அனைத்து மாணவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டு கல்லூரிக்கு வருகிறார்களா என்பதை உறுதி செய்ய இயலாத நிலையையும் கருத்திற்கொண்டு, நடைபெற உள்ள இந்த ஒரு செமஸ்டர் தேர்வுகளை மட்டும் நேரடித் தேர்வாக நடத்தாமல், ஆன்லைன் தேர்வாக நடத்திட வேண்டும்.

மாணவர்கள் , மாணவியர்கள் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் அரசு திரும்பப் பெற வேண்டும் " என அதில் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: கடல்நீரை குடிநீராக்க புதிய தொழில்நுட்பம்: சென்னை ஐஐடி சாதனை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.