மத்திய அரசு நிறுவனங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதில் குறைந்தபட்சமாக 4 விழுக்காடு வரை பட்டியலின மற்றும் பழங்குடியின சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களிடமிருந்து பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அவை பெரும்பாலும் நிறைவேற்றப்படாமலே உள்ளன. இந்த இலக்கை முழுமையாக அடையும் நோக்கத்துடனே இந்த மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இங்கு பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோருக்கான விற்பனையை மேம்படுத்துதல், சந்தைப்படுத்துவதற்கான உதவி, வழிகாட்டுதல் மற்றும் திறன் மேம்பாடு, கடன் பெற உதவி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் குறித்த விவரத் தொகுப்பு வழங்குதல் ஆகிய உதவிகள் செய்யப்படுகின்றன. அவர்களுக்கென்று தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பு ஏற்படுத்தப்படுகிறது.
ஏற்கனவே தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களும், புதிதாக தொழில் தொடங்குபவர்களும் இங்கு வந்து தேவையான உதவிகளைப் பெற முடியும். இந்நிலையில், பட்டியலின மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் மேம்பாட்டிற்கான பல புதிய சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வழங்கப்படும் புதிய சலுகைகள்:
- வணிக கடன்களுக்கான தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின சிறு, குறு தொழில் முனைவோர் செலுத்திய லோன் பிராசசிங் தொகையில் 50% அல்லது 1 லட்சம் ரூபாய் வரை திரும்ப செலுத்தப்படும் (Reimbursement). (இவற்றில் எது குறைவான தொகையோ அவை திரும்ப செலுத்தப்படும்).
- பொதுத்துறை நிறுவனங்களின் டெண்டர்களில் கலந்துகொள்வதற்காக வங்கி உத்தரவாத தொகையில் 50 விழுக்காடு அல்லது 1 லட்ச ரூபாய் திரும்ப செலுத்தப்படும்.
- பொருட்களின் தரத்தை பரிசோதிக்க பயன்படுத்திய ஆய்வகத்திற்கான கட்டணம், பிஐஎஸ் போன்ற தரச் சான்றிதழ் பெற செலுத்திய கட்டணத்தில் இருந்து 50 விழுக்காடு அல்லது 1 லட்ச ரூபாய் திரும்ப செலுத்தப்படும்.
- ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகத்திற்கு செலுத்திய உறுப்பினர் கட்டணத்திலிருந்து 50 விழுக்காடு அல்லது இருபதாயிரம் ரூபாய் திரும்ப செலுத்தப்படும்.
- தொழில் மேம்பாடு தொடர்பாக குறைந்த கால படிப்பு படிக்கும் எஸ்.சி, எஸ்.டி தொழில் முனைவோருக்கும் அவரது குழந்தைகளுக்கும் கல்வி கட்டணம் திரும்ப செலுத்தப்படும்.
- தொழில் நிறுவனங்களுக்கிடையேயான இணையதளமான msmemart.com பயன்படுத்துவதற்கான உறுப்பினர் கட்டணம் முதல் ஆண்டில் 100 விழுக்காடு வரையும், அடுத்த ஆண்டுகளில் 80 விழுக்காடு வரையும் திரும்ப செலுத்தப்படுகிறது.
இது தொடர்பாக மேலும் உதவிக்கு கிண்டி ஜிஎஸ்டி சாலையிலுள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்பாட்டு நிறுவன வளாகத்தில் உள்ள தேசிய எஸ்.சி, எஸ்.டி ஹஃபைதொடர்புகொள்ளலாம்.
இதையும் படிங்க: லாட்டரி சீட்டு தற்கொலை;குற்றவாளிகள் தப்பிக்க முடியாது - அமைச்சர்