தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் பிரசாதம், விளக்கு ஏற்றுவதற்கான வெண்ணெய், நெய் ஆகியவற்றை ஆவின் நிறுவனம் மூலமாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என அறநிலையத் துறை ஆணையர் குமரகுருபரன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், "கோயில்களில் பிரசாதங்களின் தரத்தினை மேம்படுத்தவும், பிரகாரங்களில் தரமற்ற நெய்யைப் பயன்படுத்தி விளக்கு / தீபம் ஏற்றுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசினைத் தவிர்க்கும்பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயில்களில் விளக்கேற்றவும், நெய்வேத்திய பிரசாதம் தயார் செய்யவும், பயன்படுத்தப்படும் வெண்ணெய், நெய் போன்ற பொருள்களை ஆவின் நிறுவனம் மூலம் மட்டுமே கொள்முதல்செய்து பயன்படுத்த வேண்டும். இது வரும் ஜனவரி 1ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆவின் மூலம் நாட்டு மாட்டுப் பால் விற்பனை