ETV Bharat / state

போட்டித் தேர்வுக்கு இணையவழி பயிற்சி வகுப்பு: சென்னை ஆட்சியர் அறிக்கை - Online Training Course

சென்னை: போட்டித் தேர்வுக்கு இணைய வழியில் இலவச பயிற்சி நடக்கிறது எனச்  சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.

Collector
Collector
author img

By

Published : Oct 13, 2020, 4:17 PM IST

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கையில், "மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், சென்னை சாந்தோம் அலுவலகத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் அனைத்துப் போட்டித் தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் இலவசமாகத் தொடர்ந்து நடத்தப்பட்டுவருகின்றன.

இப்பயிற்சியின் மூலம் சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு தேர்வர்கள் பயனடைந்துள்ளனர்.

இதனைக் கருத்திற்கொண்டு தற்போது தமிழ்நாடு சீருடைப் பணியாளர் குழுமத்தால் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டாம் நிலை காவலர், இரண்டாம் நிலை சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பார் பதவிகளுக்கான (TNUSRB - 2020) பொது, போட்டித் தேர்வுக்கு (காலிப்பணியிடங்கள் - 10,906) சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தேர்வர்கள் கலந்துகொண்டு எளிதில் வெற்றி பெற ஏதுவாக போட்டித்தேர்வுக்கான இணையவழி (WEBINAR) இலவச பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 16ஆம் தேதி முதல் சென்னை சாந்தோமில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மைய அலுவலகத்தால் தொடங்கப்படவுள்ளது.

இதில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள தேர்வர்கள் www.tnusrbonline.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதற்கான நகலுடன் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், சாந்தோம், சென்னை -4, அலுவலகத்தைத் தொடர்புகெண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 044-24615160 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: ஆனைக்கொம்பன் ஈ தாக்குதல்: அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.