ETV Bharat / state

மாணவர்களை ஆன்லைன் விளையாட்டுகளில் பங்கேற்கமுடியாமல் அரசினால் மட்டும்தான் தடுக்க முடியும் - நீதிபதிகள்

ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் மாணவர்களை ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் ஒன்றிய, மாநில அரசுகள் தான் தடுக்க முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Online games dilapidated students education, MHC order

author img

By

Published : Jul 1, 2021, 3:39 PM IST

ஆன்லைன் வகுப்புகளுக்குப் பயன்படுத்தப்படும் செல்போன், கணினி, மடிக்கணினி ஆகியவற்றில் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளைத் தடை செய்யவும், இதுதொடர்பாக ஆய்வு செய்து கண்காணிப்பதற்கான நடைமுறையைக் கொண்டுவரக்கோரியும் மார்ட்டின் ஜெயக்குமார் என்பவர் பொது நல வழக்குத் தொடர்ந்துள்ளார்.

வன்முறையைத் தூண்டும் ஆன்லைன் விளையாட்டுகள்

இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் விளையாட்டுகளால் குழந்தைகளும், இளம் பருவத்தினரும், மாணவர்களும் விளையாட்டுகளில் உள்ள கதாப்பாத்திரங்களாக மாறிவிடுவதுடன், வன்முறை எண்ணங்களுக்கும் ஆளாவதாக வாதிட்டார்.

இதுபோன்ற விளையாட்டுகளில் பங்கேற்பவர்களை தவறாகப் பயன்படுத்துவதற்கு பப்ஜி மதன் போன்றவர்கள் மட்டுமே காரணம் இல்லை என்றும், நாடு முழுவதும் இந்த விளையாட்டில் பங்கேற்பவர்களும் காரணமாக அமைந்துவிடுவதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

அவர்களை பாதுகாப்பதற்கான தகுந்த நடவடிக்கையை எடுக்க ஒன்றிய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

அப்போது நீதிபதிகள், கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பலரும் ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கின்றனர். அதேசமயம் ஆன்லைன் மற்றும் ஆப்லைன் விளையாட்டுகளுக்கும் அவர்கள் அடிமையாகி விடுவதாக வேதனைத் தெரிவித்தனர்.

ஆன்லைன் விளையாட்டுகளைத்தடுக்க அரசுகளால் தான் முடியும்
படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற காரணங்களுக்காக, அதிக அளவில் மொபைல் மற்றும் கணினி பயன்படுத்தும் மாணவர்கள், அதிகப்படியான கோப மனநிலைக்கும், தற்கொலை முயற்சிக்கும் ஆளாவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு அடிமையாகாமல் அரசுகள் தான் தடுக்க முடியும் எனத் தெரிவித்தனர்.

பெற்றோர் மற்றும் பெரியோரிடம்கூட குழந்தைகள் பேசுவது குறைந்து வருவதாக கவலை தெரிவித்ததுடன், தங்கள் குழந்தைகளுடன் பெற்றோர் நேரத்தைச் செலவழிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினர்.

பின்னர் வழக்கு குறித்து ஒன்றிய, மாநில அரசுகள் 4 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையைத் தள்ளிவைத்தனர்.

இதையும் படிங்க: "ஒன்றிய அரசு" என கூறுவதற்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம் அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.