ETV Bharat / state

’ஆன்லைன் வகுப்புகளில் விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்’ - Online classes, strengthens violating

சென்னை: ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை மீறும் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

Online classes, strengthens action against violating schools, state report, MHC

author img

By

Published : Sep 1, 2020, 3:23 PM IST

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை கோரிய வழக்குகள் கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தனியார் பள்ளிகளில் ஆன்லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு விதிமுறைகள் எப்படி பின்பற்றப்படுகிறது, மலைப்பகுதி மாணவர்களுக்கு எப்படி கல்வி வழங்கப் போகிறார்கள், தனியார் பள்ளிகள் முன்கூட்டியே பதிவு செய்து வகுப்புகளை நடத்துவது தொடர்பாக நீதிபதிகள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று (செப்.01) மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆன்லைன் வகுப்புகள் தொடர்பாக வழிகாட்டு விதிமுறைகள் அமல்படுத்துவது தொடர்பாக மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குநர் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். விதிமுறைகளை மீறும் பள்ளிகளுக்கு எதிராக புகார்கள் பெறப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

மேலும், முன்கூட்டியே பதிவு செய்த வகுப்புகள் தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளிகள் தான் முடிவெடுக்க வேண்டும். மலைவாழ் மாணவர்களுக்கு கல்வி தொலைக்காட்சி மூலமாக கல்வி வழங்கப்பட்டு வருகிறது. தனியார் தொலைக்காட்சிகள் மூலமாகவும் கல்வி கற்பிக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

மாணவர்களின் நலன் அனைவரின் பொறுப்பு. ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான வழிகாட்டு விதிமுறைகளை பள்ளிகள் பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க அமைப்பை உருவாக்க வேண்டும். மாணவர்கள் ஆபாச இணையதளங்களுக்குள் நுழைய முடியாதபடி, பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கின் தீர்ப்பை, தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.