சென்னை நந்தனத்தில் உள்ள குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை அலுவலகத்தில் அதன் கண்காணிப்பாளர் சாந்தி செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், வெங்காய விலை அதிகரித்து வரும் நிலையில், வியாபாரிகள் வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுகிறார்களா என்பதை கண்டறிய குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் பிரதிப் வி ஃபிலிப் அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு முழுவதும் 33 குழுக்கள் அமைக்கப்பட்டு 40 இடங்களில் சோதனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.
மேலும், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது அத்தியாவசிய பண்டக சட்டம் (4)ன் படி நடவடிக்கை எடுக்கப்பட்டு, அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அவர்களது கடையின் உரிமமும் ரத்து செய்யப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை வெங்காய பதுக்கல் நடைபெறுவதாக தெரிந்தால் பொதுமக்கள் 98 40 97 96 69 என்ற எண்ணிற்கு தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம் என தெரிவித்திருக்கிறார்.
பிற மாவட்டங்களிலும் ஆய்வாளர்கள் தலைமையில் சோதனை நடைபெற்று வருவதாகவும், இதுவரை பதுக்கல் தொடர்பாக எந்த புகாரும் அளிக்கப்படவில்லை எனவும் அப்படி புகார்கள் வரும் பட்சத்தில் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
மதுரையில் பயன்பாட்டுக்கு வந்த நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடம்!