தாம்பரம் அடுத்த முடிச்சூர் சாலை ஸ்ரீராம் நகரில் காஜாமொய்தீன் என்பவர் மட்டன் கடை வைத்து நடத்திவருகிறார். இவர் சனி, ஞாயிறு கறி விற்பனைகாக ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான 12 ஆடுகளை வெளியிலிருந்து வாங்கி வந்து கறிக்கடைக்குள் கட்டி வைத்துள்ளார்.
நேற்று (ஜன. 22) வழக்கம்போல் இரவு 9 மணிக்கு கடையை அடைத்துவிட்டு காஜா மொய்தீன் வீட்டிற்கு சென்ற நிலையில் இன்று (ஜன. 23) அதிகாலை கடைக்கு வந்து பார்த்தபோது ஆடுகள் காணாமல் போனது தெரியவந்துள்ளது. இதன் பின்னர் கறிக்கடையில் இருந்த பின்பக்க கேட் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து காஜா மொய்தீன் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் நள்ளிரவில் அடையாளம் தெரியாத நபர்கள் பின்பக்க கதவை உடைத்து தாங்கள் கொண்டுவந்த காரில் ஆடுகளை திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஆடுகளை திருடியவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க... பெண்ணின் கவனத்தை திசை திருப்பி நூதனமாக 1 லட்சம் ரூபாய் கொள்ளை!