ETV Bharat / state

ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 170 கோடி வசூல் - tamil latest news

சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் மதுபான விற்பனையில் ரூ. 170 கோடி வசூலாகியுள்ளது.

ஒரே நாளில் டாஸ்மாக் கடைகளில் 170 கோடி வசூல்

author img

By

Published : May 8, 2020, 10:44 AM IST

தமிழ்நாட்டில் மொத்தம் 5299-க்கும் மேற்பட்ட மதுபானக் கடைகள் உள்ளன. இவை அனைத்தும் கடந்த 43 நாள்களாக கரோனா தொற்றால் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் மூடப்பட்டிருந்தன.

இந்த நிலையில் மதுபானக் கடைகள் உள்பட கடைகளைத் திறக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை மத்திய அரசு வழங்கியது. அதன்படி கடந்த மூன்று நாள்களுக்கு முன்னர் டெல்லி, உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா, சண்டிகர் உள்ளிட்ட மாநிலங்களில் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன.

அதேபோல் தமிழ்நாட்டிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. டாஸ்மாக் கடைகள் திறப்புக்கு எதிர்ப்புகள் நிலவிய நிலையிலும் அதற்கான ஏற்பாடுகள் நடந்தன. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் மதுபானக் கடைகள் திறக்க அனுமதி இல்லை. இதனால் இங்குள்ள 800 கடைகள் மூடப்பட்டிருந்தன.

அது போல் சென்னையை அடுத்த மற்ற மாவட்டங்களின் எல்லைகளிலும் 900 கடைகள் உள்பட மொத்தம் 1700 கடைகள் திறக்கப்படவில்லை. மற்ற பகுதிகளில் காலை 10 மணிக்கு கடை திறப்பதற்கு முன்பே காலை 6 மணிக்கெல்லாம் மது அருந்துபவர்கள் காத்திருந்தனர். வயது வாரியாக அரசு நேரம் ஒதுக்கீடு செய்திருந்தது.

மேலும் நேற்று( மே 7) காலை 10 மணிக்குத் திறக்கப்பட்ட கடைகள் சரியாக மாலை 5 மணிக்கு மூடப்பட்டன. இந்த நிலையில் நேற்று( மே 7 ) ஒரே நாளில் தமிழ்நாடு கடைகள் மூலம் ரூபாய் 170 கோடி வசூலானதாக கூறப்படுகிறது. மேலும் 1,700 மதுக்கடைகள் திறக்கப்படாமலேயே இது மிகப்பெரிய வசூல் என கூறப்படுகிறது.

மாவட்ட வாரியாக வசூல் ;

மதுரை மண்டலம் : ரூ. 37 கோடி

சென்னை புறநகர் பகுதி: ரூ. 34 கோடி

திருச்சி மண்டலம்: ரூ. 32 கோடி

சேலம் மண்டலம்: ரூ. 33 கோடி

கோவை மண்டலம்: ரூ. 34 கோடி

தமிழ்நாடு முழுக்க வழக்கமாக அனைத்துக் கடைகளும் திறந்திருந்தாலே ஒரு நாளைக்கு ரூ 90 முதல் ரூ 100 கோடி வரை வசூலாகும். இந்த நிலையில் பெரும்பாலான மதுபானக் கடைகள் மூடியிருந்த நிலையிலும் ரூ 170 கோடி வசூலானது பெரிய விஷயமாக கருதப்படுகிறது.

இதையும் படிங்க: அதியமான் சிலைக்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியர் மரியாதை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.