சென்னை சூளைமேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லயோலா கல்லூரி அருகே உள்ள சுரங்கப்பாதையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி சோதனை செய்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த நபரின் உடமையில் கட்டுகட்டாக சுமார் ஒரு கோடி ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து இருசக்கர வாகனத்தில் வந்த நபரை பணத்துடன் அழைத்துகொண்டு, சூளைமேடு காவல் நிலையம் அழைத்துச் சென்று உதவி ஆணையாளர் விசாரணை மேற்கொண்ட பின்னர் பணத்தை வருமானவரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர்கள் நடத்திய விசாரணையில் அட்டிகா கோல்ட் கம்பெனிக்கு சொந்தமான பணம் என்பது தெரியவந்தது.இதையடுத்து உரிய ஆவணங்களைக் காண்பித்து விட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு வருமான வரித்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதையும் படிங்க: தென் மாவட்டங்களில் இருந்து ரயிலில் கஞ்சா கடத்தல்...