ETV Bharat / state

பாஜகவை வறுத்தெடுக்கும் ‘ஒன்றிய உயிரினங்கள்’ - twitter page

ஒன்றிய உயிரினங்கள் என்ற ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடப்பட்டு வரும் பதிவுகள் ட்விட்டரில் ட்ரெண்டாக மாறியுள்ளது.

ஒன்றிய உயிரினங்கள்
ஒன்றிய உயிரினங்கள்
author img

By

Published : Jun 9, 2021, 7:38 PM IST

சென்னை: திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மத்திய அரசை ஒன்றிய அரசு எனவும், தமிழகம் என்பதை தமிழ்நாடு என அழைக்கத் தொடங்கியிருப்பது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.

இந்நிலையில், சமீபத்தில் அர்ஜுன் சம்பத்தின் இந்து மக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் போடப்பட்ட ஒரு பதிவு பெரும் ட்ரெண்டாக மாறியுள்ளது.

ட்விட்டரில் ஒன்றிய உயிரினங்கள்
ட்விட்டரில் ஒன்றிய உயிரினங்கள்

அந்த பதிவில், இவனுங்க பேசுற பேச்ச பாத்தா டைனோசர் கூட தமிழ்ல தான் பேசிச்சின்னு சொல்லுவானுங்க போல இருக்கு... எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஒன்றிய உயிரினங்கங்களின் பிறப்பிடம்
ஒன்றிய உயிரினங்கங்களின் பிறப்பிடம்

இதனையடுத்து, ட்விட்டர் பக்கத்தில் டைனோசர், புலி, சாரபாம்பு, எலி, அனகோண்டா என உலகத்தில் உள்ள வாயில்லா உயிரினங்களின் பேரில் கணக்குகள் தொடங்கப்பட்டு, அந்த இந்து மக்கள் கட்சியின் ட்விட்டர் பதிவு குறித்து வறுத்தெடுத்து வருகின்றனர்.

ஒன்றிய உயிரினங்கள் கோரிக்கை
ஒன்றிய உயிரினங்கள் கோரிக்கை

மேலும், அந்த உயிரினங்கள் அனைத்தும் கரோனோ தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என மக்களை உயிரினங்கள் அறிவுறுத்துவதும், தமிழ் மொழியை புறக்கணிப்போரையும் தமிழ்நாட்டையும் அதன் வரலாற்றை இகழ்வோரையும் விமர்சிக்கும் வகையிலும் பதிவுகள் இடப்பட்டு வருகின்றன.

அதேசமயம் ட்விட்டரில், ‘ஒன்றிய உயிரினங்கள்’ என ஹேஷ்டேக்கும் தீவிரமாக ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. ஹேஷ்டேக்கின் கீழ் பதிவிடப்பட்டு வரும் பதிவுகள் அனைத்தும் நகைச்சுவையாகவும், சுவாரஸ்யமாகவும் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

ஒன்றிய உயிரினங்கள் மீம்ஸ்
ஒன்றிய உயிரினங்கள் மீம்ஸ்

இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி சான்றிதழில் இனி நாமே திருத்தம் செய்யலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.