ETV Bharat / state

ஆம்னி பேருந்துகள் இயக்கம் தொடக்கம்! - Curfew Order

சென்னை: தமிழ்நாட்டில் வரும் 16ஆம் தேதி முதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Omni Buses service started
Omni Buses service started
author img

By

Published : Oct 14, 2020, 10:31 PM IST

கரோனா பாதிப்பு காரணமாக போக்குவரத்து சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. பின்னர் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பேருந்துகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டது. இருப்பினும், ஊரடங்கு காலத்தில், பேருந்துகள் இயங்காத நேரத்தில் செலுத்திய சாலை வரியை ரத்து செய்ய வேண்டும் என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

இதனை தமிழ்நாடு அரசு ஏற்க மறுத்ததால் தனியார் பேருந்துகள் சேவை இயக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் 30ஆம் தேதிவரையிலான காலகட்டத்திற்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து வரும் 16 ஆம் தேதி முதல் தமிழ்நாட்டில் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படும் என ஆம்னி பேருந்துகள் உரிமையாளர் சங்க பொதுச் செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். மேலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கு மோட்டார் வாகன ஆய்வாளர் சான்றளிப்பார் என்றும், போக்குவரத்து ஆணையர், பேருந்துகளுக்கு சாலை வரியில் இருந்து விலக்கு அளிப்பர் என்றும் பேருந்து உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

தமிழ்நாட்டில், பதிவு செய்யப்பட்ட 950 பேருந்துகளில் ஏற்கெனவே 300 பேருந்துகளுக்கு சான்று அளிக்கப்பட்டுள்ள நிலையில் நாளைய(அக் 15) தினம் மேலும் 200 பேருந்துகளுக்கு சான்று அளிக்கப்பட்டு, முதற்கட்டமாக அக் .16 ஆம் தேதி 500 பேருந்துகள் இயக்கப்படும் எனவும், அதன் பின்னர் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் கூறுகின்றனர்.

ஆயுத பூஜை, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தில் அதிக அளவிலான மக்கள் பயணம் செய்வார்கள். அதற்கு முன்னதாக பேருந்து சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தற்போது பள்ளிகள் திறப்பது ஏன் சாத்தியமில்லை’ - அமைச்சர் செங்கோட்டையன் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.