ETV Bharat / state

"ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை" - அமைச்சர் சிவசங்கர் - சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழைகளை பாதிப்பதில்லை

author img

By

Published : Sep 27, 2022, 5:28 PM IST

சென்னை: ஆம்னி பேருந்து சங்க நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்திற்கு பின் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "அரசு பேருந்து கட்டணத்துடன் ஆம்னி பேருந்து கட்டணத்தை ஒப்பிடுவது தவறான கண்ணோட்டம். அதிக வசதிகள் கொண்ட பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமை தான் உள்ளது. அரசு சார்பில் கட்டணத்தை முறைப்படுத்த ஆலோசனைகள் வழங்கினோம். விழா காலங்களில் ஆம்னி பேருந்து கட்டணம் அதிகரிப்பதாக புகார் எழுந்த நிலையில் இன்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

ஆம்னி பேருந்து கட்டண உயர்வு ஏழை, எளிய மக்களை பாதிப்பது இல்லை. ஆம்னி பேருந்துகளை சேவையின் அடிப்படையில் இயக்க முடியாது. அரசு பேருந்துகளில் பயணிக்காதவர்கள் ஆம்னி பேருந்து கட்டணத்தை தெரிந்து கொண்டே முன்பதிவு செய்து செல்கின்றனர். தீபாவளி மற்றும் ஆயுத பூஜை விடுமுறைகள் வர உள்ள நிலையில் எதிர்காலத்தில் கூடுதல் கட்டண விவகாரங்கள் இருக்க கூடாது என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி இருக்கிறோம்.

பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் பேருந்து கட்டணத்தை நிர்ணயம் செய்து பேருந்துகளை இயக்க அறிவுறுத்தி இருக்கிறோம். ஓரிரு நாட்களுக்குள் சங்கத்தினர் உடன் கலந்து ஆலோசனை செய்து மறுக்கடமைப்பு செய்யப்படும்" என்று கூறினார்.

இதையும் படிங்க: வெடித்து சிதறிய சரவண பவன் ஹோட்டல் ஏசி சிலிண்டர்.. ஒருவர் படுகாயம்..

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.