சென்னை மடிப்பாக்கத்தில் தனது இளைய மகன் பாலாஜியுடன் வசித்துவருபவர் மூதாட்டி மீரா ஞானசுந்தரம் (73). மீராவுக்கு பல கோடி மதிப்பிலான சொத்துகள் உள்ளது. இவர்மீது சுபிக்ஷா சீட்டு மோசடி வழக்கு ஒன்று பொருளாதாரக் குற்றப்பிரிவு அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது.
தாய் மீராவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதால் தனக்கு டெல்லியில் தெரிந்த மருத்துவர் ஒருவர் இருப்பதாகக் கூறி பாலாஜியின் நண்பரான குண்டூரைப் பூர்விகமாகக் கொண்ட டெல்லியைச் சேர்ந்த ஷேக் அப்துல் ஹமீது மற்றும் அவரது தம்பி சேக் அப்துல் மேக்முத் அறிமுகமாகி உள்ளார். பின்னர் இதற்கு 20 லட்சம் ரூபாய் செலவாகும் என பணத்தைப் பெற்றுக்கொண்டு அழைத்து சென்றுள்ளார்.
அப்போது மீரா மற்றும் மகன் பாலாஜி மீது பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி வழக்கு நிலுவையில் இருப்பது ஷேக் அப்துல் ஹமீத் மற்றும் சேக் அப்துல் மேக்முத் ஆகியோருக்கு தெரியவந்துள்ளது.
பின்னர் திடீரென்று மீராவிடம் பொருளாதார குற்றப்பிரிவில் நிலுவையில் உள்ள சுபிக்ஷா வழக்கு தொடர்பாக ஓரிரு நாள்களில் இருவரையும் காவல் துறையினர் கைது செய்ய உள்ளதாக பாலாஜி கூறியுள்ளார். இதனால் தனக்கு தெரிந்த உயர் அலுவலர்களிடம் பேசி கைது நடவடிக்கை ரத்து செய்கிறேன் என ஷேக் ஹமீது கூறியுள்ளார். மேலும் இதனால் உயர் அலுவலர்களுக்கு 10 கோடி ரூபாய் லஞ்சமாக வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதற்கு மீராவின் மகன் பாலாஜி தங்களிடம் அவ்வளவு பணமில்லை என கூறியுள்ளார். இதனால் மகன் பாலாஜி இல்லாத சமயத்தில் கைது நடவடிக்கையை ரத்து செய்வதாக கூறி வெற்று பத்திரத்தில் ஹமீத் மற்றும் ஷேக் ஆகியோர் கையெழுத்து வாங்கி சென்றுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக மீரா வழக்கறிஞரிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரிக்கும் போது 10 கோடி ரூபாய் உயர் அலுவலர்களுக்கு கொடுக்கவில்லை எனவும், நிலத்தை அபகரிக்க முயன்றதும் தெரியவந்தது. இதனால் மீரா மற்றும் அவரது மகன் பாலாஜி ஆகியோர் சென்று சேக்கிடம் முறையிட்ட போது, நிலத்தை கொடுக்கமுடியாது எனவும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளனர்.
இதனால் மீரா காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து ஷேக் ஹமீது மற்றும் ஷேக் மேக்முத் மீது புகாரளித்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க:ஆன்லைனில் பாலியல் லிங்க்: உ.பி.யில் 11 பேர் கைது