ETV Bharat / state

வாட்ஸ்அப் செயலியில் வதந்தி பரப்பிய முதியவர் கைது - தவறான செய்திகளை பரப்பிய முதியவர் சென்னையில் கைது

சென்னை: வாட்ஸ்அப் செயலியில் தவறான தகவல் பரப்பியதாக முதியவரை காவலர்கள் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்ட முதியவர்
கைது செய்யப்பட்ட முதியவர்
author img

By

Published : Feb 2, 2020, 10:10 AM IST

சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா (50). இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன் (76) என்பவர் வாட்ஸ்அப் செயலியில் உள்ள குரூப்பில் பதிவிட்டுள்ளார்.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த இந்திரா, பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று இது குறித்து கேட்டுள்ளார்.

அதற்கு, தாமோதரன் அப்படிதான் செய்வேன் என்று கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளிவிட்டுச் சென்றுள்ளார்.

மேலும், இதேபோல் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் பலர் குறித்து தவறாக தகவலை சமூகவலைதளங்கள் மூலம் பரப்பியுள்ளார்.

இதனால் நேரு நகர் நலசங்கம் சார்பில் சுமார் 25பேர் தாமோதரன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட தவறான தகவல்
சமூகவலைதளத்தில் பரப்பப்பட்ட தவறான தகவல்

இந்தப் புகாரின் பேரில் காவலர்கள் தாமோதரனை கைது செய்தனர். தாமோதரன், ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார்.

கைது செய்யப்பட்ட முதியவர்
கைது செய்யப்பட்ட முதியவர்

பின்னர், இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இவர் மீது ஏற்கெனவே திருமங்கலம் காவல் நிலையத்திலும் இதேபோன்று புகாரளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஃபேஸ்புக்கில் ஆபாச காணொலி பகிர்வு: அஸ்ஸாம் இளைஞர் போக்சோவில் கைது

Intro:Body:சமூக வலைதளங்களில் குடியிருப்பு வாசிகளை பற்றி அவதூறாக குறுந்தகவல் பரப்பிய முதியவர் கைது.

சென்னை திருமங்கலம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் இந்திரா(50).இவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இந்த நிலையில் இவரது மகன் கஞ்சா விற்பதாக கூறி அப்பகுதியில் வசிக்கும் தாமோதரன்(76) என்பவர் வாட்ஸ் ஆப் குரூப் மூலமாக பதிவிட்டு உள்ளார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் இந்திராவிடம் கேட்டுள்ள்னர்.இதனால் கோபடைந்து பொய்யான தகவல் பரப்பிய தாமோதரனிடம் சென்று கேட்கும் போது அப்படிதான் செய்வேன் என்று கொலை மிரட்டல் விடுத்து கீழே தள்ளிவிட்டு சென்றுள்ளார்.மேலும் இதே போல் குடியிருப்பு வாசிகள் அனைவருக்கும் தவறாக தகவலை குறுந்தகவல் மூலம் பரப்பியும்,தவறான சமிக்கையும் அனுப்பி உள்ளார். இதனால் நேரு நகர் நலசங்கம் சார்பில் சுமார் 25பேர் தாமோதரன் மீது திருமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இப்புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குபதிவு செய்து தாமோதரனை கைது செய்தனர்.பின்னர் விசாரணையில் இவர் ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது தெரியவந்தது. பின்னர் இவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.இவர் மீது ஏற்கெனவே திருமங்கலம் காவல் நிலையத்தில் இதே போன்று வழக்கு இருந்து தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.