சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரேயா(25). இவரது தாயார் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தேனாம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம் 23ஆம் தேதி தாயாரை சந்திக்கச் சென்ற ஸ்ரேயா, மருத்துவமனை பார்க்கிங்கில் தனது காரை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். பின்னர் வந்து பார்த்தபோது, காரிலிருந்த லேப்டாப் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து, ஸ்ரேயா தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில், மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை காவலர்கள் ஆய்வு செய்தனர். அதில், குற்றவாளி காரில் வந்து கொள்ளையடித்தது தெரியவந்தது.
பின்னர் காவல் துறையினர் நடத்திய விசாரணையில், லேப்டாப்பை கொள்ளையடித்த ஓலா டிரைவரான திருவேற்காடு பகுதியைச் சேர்ந்த மகேந்திரனை (40) கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து லேப்டாப், கார் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் டிரேடிங்கில் 400 கோடிக்கு மேல் மோசடி