சென்னை: தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் வரும் 16ஆம் தேதி விடுமுறை என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமிப் பிரியா அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நாளையும் (அக்.14), நாளை மறுநாளும் (அக்.15) விஜயதசமி, ஆயுதபூஜை விழா கொண்டாடப்படுகிறது. இதனால் 14 ,15 ஆகிய இரு நாள்கள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சனிக்கிழமை 16ஆம் தேதி அனைத்து அரசு பொறியியல் கல்லூரிகள், அனைத்து பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் லட்சுமிப் பிரியா அறிவித்துள்ளார்.
பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை
முன்னதாக பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தனர். அதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு 16ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’நாட்டில் நல்லிணக்கம், வளம், நல்ல உடல் நலம் பெருகட்டும்’ -ஆளுநர் ஆயுத பூஜை வாழ்த்து