ETV Bharat / state

ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது - சென்னை உயர் நீதிமன்றம் - chennai court news

ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், ராணுவ நிலத்தில் உள்ள ஆக்கிரமிப்பை எட்டு வாரத்தில் அகற்றி நிலத்தை ஒப்படைக்க தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

MHC
MHC
author img

By

Published : Nov 30, 2021, 9:16 AM IST

சென்னை: உயர் நீதிமன்றத்தில் சிங்காரவேலு என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "நந்தம்பாக்கத்தில் உள்ள துளசிங்கபுரம் பகுதியில் உள்ள நிலத்தை 1987இல் அரசு புறம்போக்கு நிலமாக மாவட்ட ஆட்சியர் அறிவித்தார்.

இந்த அரசாணையை ரத்துசெய்து அப்பகுதியில் சாலை அமைத்து, பொது கழிப்பறை உள்ளிட்டவற்றை கட்ட வேண்டும். இந்த நிலத்தை மாநகராட்சி நிலம் என அறிவிக்க வேண்டும்.

ராணுவப் பயிற்சி மையத்தைச் சேர்ந்தவர்களும், ராணுவ எஸ்டேட் அலுவலரும் 2017இல் இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவை மீறி சுற்றுச்சுவர் எழுப்பியதால் பிரதான சாலையை அணுகுவது சிரமமாக இருக்கிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம், "குறிப்பிட்ட நிலம், ராணுவ நிலம் என வகைப்படுத்தப்பட்ட நிலம்தான் எனத் தமிழ்நாடு அரசும், மாநகராட்சியும் உறுதிப்படுத்துவதால், அந்த இடத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப ராணுவத்துக்கு உரிமை உள்ளது. ஆதி திராவிடர்கள் வசிக்கும் பகுதி எனக் கூறுவதால், அரசின் திட்டங்களின்படி மாற்று இடங்களைக் கண்டறிந்து இடம் கொடுக்கலாம்.

நாட்டைப் பாதுகாக்கப் பாடுபடும் ராணுவத்தினருக்குச் சொந்தமான நிலத்தை யாரும் ஆக்கிரமிக்கக் கூடாது, அந்த நிலத்தை மீட்க அரசு நடவடிக்கை எடுத்து நிலத்தை மீட்டு, சுற்றுசுவர் கட்டும் பணிகளை காவல் துறை உதவியுடன் முடிக்க வேண்டும். வளர்ச்சி நடவடிக்கை, சாலை விரிவாக்கம், உள்கட்டமைப்பு வசதிகள் அமைக்க நிலம் தேவை என்பதால் ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்த வேண்டியது அவசியம்.

அரசின் நலத்திட்டங்களில் பலனடைய தகுதி இருந்தால், அரசு மாற்று இடம் கொடுக்கலாமே தவிர, ராணுவ நிலத்தை ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. புறம்போக்கு நிலம் என்ற அறிவிப்பை ரத்துசெய்ய முடியாது" எனக் கூறி மனுதாரரின் கோரிக்கையை நிராகரித்தார்.

மேலும், எட்டு வாரங்களில் ஆக்கிரமிப்பை அகற்றி நிலத்தை ராணுவத்திடம் ஒப்படைக்க வேண்டுமெனத் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார் நீதிபதி.

இதையும் படிங்க: நீலகிரி கோயிலில் சிறுவன் பூசாரி: அரசு அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.